ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்க இதை மட்டும் செய்தால் போதும்..!

ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்க இதை மட்டும் செய்தால் போதும்..!

இன்றைய பதிவில் நாம் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பற்றி பார்க்கலாம். பொடுகு ஆரம்பத்திலே சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் பொடுகு அதிகமாகும், தலைமுடி பிரச்சனையும் வரும். எளிய முறையில் எவ்வாறு பொடுகு அடியோடு விரட்டலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு 1:

எலுமிச்சை சாறு எடுத்து குளிக்கும் முன் தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து பிறகு தலை முடியை அலசினால் பொடுகு காணாமல் போகும்.

குறிப்பு 2:

ஒரு கைப்படி அளவு வேப்பிலை எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் பொடுகும் இருக்காது, பேன் தொல்லையும் மறையும்.

குறிப்பு 3:

எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டும் கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளித்து வர பொடுகு தொல்லை இருக்காது.

குறிப்பு 4:

குளிப்பதற்கு முன் சோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து தலைமுடிக்கு நன்றாக தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

குறிப்பு 5:

தயிர் எடுத்து 1 மணி நேரம் தலையில் ஊற வைத்து குளித்தால் பொடுகு உடனே காணாமல் போகும்.

குறிப்பு 6:

முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து, மறு நாள் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம்.

குறிப்பு 7:

தலைக்கு குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் எடுத்து 15 நிமிடம் தலையில் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.

குறிப்பு 8:

பொடுகு மறைய வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலை அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து தலைக்கு குளித்து வரலாம்.

குறிப்பு 9:

பச்சை பயிறு மாவு எடுத்து அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.

குறிப்பு 10:

வேப்பங்கொட்டை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து தலை அலசினால் பொடுகு மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *