உரித்து பேக் செய்தால் போதும் அள்ளிட்டு போவாங்க..!

உரித்து பேக் செய்தால் போதும் அள்ளிட்டு போவாங்க..!

இன்றைய பதிவில் நாம் மார்க்கெட்டில் அதிக அளவில் டிமாண்ட் இருக்கும் ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை எங்கு இருந்து வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் இந்ந தொழிலை எங்கு இருந்து தொடங்கினாலும் நல்ல லாபம் எடுக்கலாம். எந்த விதமான இயந்திரமும் இல்லாமல் மொத்தமாக பொருளை வாங்கி உரித்து பேக் செய்தால் போதும் எப்போதுமே லாபம் தரக்கூடிய அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் பச்சை பட்டாணி தொழிலை பற்றி பார்க்கலாம். பச்சை பட்டாணி தேவை அதிக அளவில் உள்ளது. நிறைய உணவு வகைகளை தயார் செய்ய, உடல் ஆரோக்கியமாக இருக்க பச்சை பட்டாணி உதவுகிறது.

தொழில் எப்படி செய்வது :

பச்சை பட்டாணி மொத்தமாக வாங்கிக்கொள்ளவும். மொத்தமாக வாங்கும் போது நமக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

மொத்தமாக வாங்கும் போது 1 கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கிறது.

உறித்து பேக் செய்யும் போது 20 கிராம், 50 கிராம், 100 கிராம் என்ற அளவுகளில் பேக் செய்யலாம்.

வருமானம் :

20 கிராம் அளவுள்ள பாக்கெட் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 1 கிலோவிற்கு 20 கிராம் அளவில் பேக் செய்யும் போது 50 பாக்கெட்டுகள் கிடைக்கிறது.

பட்டாணி பேக் செய்ய பேக்கிங் கவர் தேவைப்படுகிறது.

நேரடியாக விற்பனை செய்யும் போது 5 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். கடைகளில் விற்பனை செய்யும் போது 4 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

5 ரூபாய் என்று விற்பனை செய்யும் போது 1 கிலோவிற்கு 250 ரூபாய் கிடைக்கிறது. எல்லா செலவும் போக 1 கிலோவிற்கு 140 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

இதில் 20 கிராம் பாக்கெட் மட்டும் இல்லாமல் 50 கிராம், 100 கிராம் 500 கிராம் இந்த அளவிலும் பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த தொழில் கூட மசாலா பொருட்கள், ஏலக்காய், முந்தரி இந்த மாதிரியான பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

பேக்கிங் செய்த பச்சை பட்டாணியை சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *