
எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இன்னைக்கி நீங்கள் உங்கள் வீட்டில் இப்படி சத்தான, உடலுக்கு ஆரோக்கியமான கொண்டைக்கடலை வைத்து தோசை செய்து நீங்களும், உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுங்கள் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கொண்டைக்கடலை சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. அது மட்டும் அல்லாமல், இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
இப்போ ஹெல்தான ஒரு டிஷ், எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
கொண்டைக்கடலை தோசை செய்ய தேவையான பொருட்கள் :-
கொண்டைக்கடலை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 2 பல்
சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :-
😋 முதலில் கொண்டைக்கடலையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
😋 பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை புளிக்க வைக்க தேவையில்லை.
😋 பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து, மாவில் கலந்து கொள்ளவும்.
😋 அதன்பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை வடிவில் ஊற்றி எண்ணெய் விட்டு தயார் ஆனதும் தோசை எடுத்து சூடாக பறிமாறவும்.
😋 இப்போது நமக்கு சூடான சத்தான கொண்டைக்கடலை தோசை தயார்…