உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த தொழிலை செய்யலாம்!!!

இன்றைய பதிவில் நாம் அதிக முதலீடு இல்லாமல், வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு சுலபமான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் இந்த தொழிலை செய்யலாம். இந்த பொருளை தயார் செய்ய தேவையான மூலப்பொருள் சுலபமாக கிடைக்கும். மூலப்பொருளுக்கும் அதிக முதலீடு செய்ய தேவையில்லை.

இன்றைய பதிவில் நாம் ஆரஞ்சு பவுடர் தொழிலை பற்றி பார்க்கலாம். ஆரஞ்சு பவுடர், ஆரஞ்சு தோலை காய வைத்து தயார் செய்கிறார்கள். ஆரஞ்சு பவுடர் முக்கியமாக எதற்காக தேவைப்படுகிறது என்று பார்த்தால் அழகு பொருளாக, முகத்தில் இருக்கும் கருவளையம், முகம் பளபளப்பாக, முகத்தில் பேஸ்க் பேக்காக பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக பயன்படுத்துவதால் ஆரஞ்சு பவுடர் ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.

இவ்வளவு விலைக்கு விற்றாலும் இந்த பொருளை தயார் செய்ய மிக குறைந்த முதலீடு போதும்.

மூலப்பொருள் :

ஆரஞ்சு பவுடர் தயார் செய்ய ஆரஞ்சு தோல் தேவைப்படுகிறது. இந்த ஆரஞ்சு தோல் ஜுஸ் கடைகளில், ஓட்டல் இந்த இடத்தில் இருந்து வாங்கலாம்.

இந்த இடத்தில் வாங்கும் போது ஒரு சில இடங்களில் நமக்கு இலவசமாக கிடைக்கும். ஒரு சில இடங்களில் பணம் கேட்பார்கள்.

தயாரிக்கும் முறை :

ஆரஞ்சு பழத்தோல் மட்டும் எடுத்து, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி காய வைக்க வேண்டும். 4 லிருந்து 5 நாட்கள் காயவைத்தால் நன்றாக காய்ந்து விடும். கையில் எடுத்தால் உடையும், அந்த அளவிற்கு காய வைக்க வேண்டும். காய வைத்து மிக்ஸியில் அரைத்து சலித்து பேக் செய்யலாம்.

பேக்கிங் :

தயார் செய்த ஆரஞ்சு பவுடர் 100கிராம், 250கிராம் இந்த அளவுகளில் பாக்கெட்டில், டப்பாவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

முதலீடு :

இந்த தொழிலுக்கு மிஷின் தேவையில்லை, கடை தேவையில்லை. பேக்கிங் கவர் மற்றும் மூலப்பொருளுக்கு மட்டும் முதலீடு செய்தால் ஆரம்பத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.

செலவு :

ஒரு கிலோ ஆரஞ்சு பவுடர் தயார் செய்ய 2.50கிலோ ஆரஞ்சு தோல் தேவைப்படுகிறது. 1 கிலோ தயார் செய்ய மூலப்பொருட்கள், பேக்கிங் எல்லா செலவும் சேர்த்து 100ரூபாய் செலவு ஆகிறது.

லாபம் :

1 கிலோ தயார் செய்ய 100ரூ செலவு ஆகிறது. விற்பனை செய்யும் போது 100கிராம் பவுடர் 100 ரூபாய்க்கு, 1 கிலோ பவுடர் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

1 கிலோவுக்கு லாபமாக 900 ரூபா‌ய் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 10 கிலோ விற்பனை செய்தால் 9000 ரூ வருமானம் எடுக்கலாம்.

சந்தை :

தயார் செய்த இந்த பொருளை ஆன்லைன் ஸ்டோர்களில், ஆழகு நிலையங்களில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *