உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா??? அப்படி என்றால் இதுதான் காரணம்!!!

தலைவலி எந்த ஒரு காரணத்தினாலும் வருவதில்லை. தலைவலி வருவதற்கு முக்கிய காரனம் நாம் செய்யும் செயல்களும் ஒரு காரணம் தான். தலைவலி வந்தால் அதற்கு நிறைய மாத்திரைகள் எடுப்பது , வைத்தியங்கள் பார்ப்பது என்று பல விதமாக தலைவலி வைத்தியம் செய்கிறோம். இருந்தாலும் தலை வலி முழுமையாக குணமடைவதில்லை. தலைவலி எந்த காரணத்தினால் வருகிறது என்று தெரிந்து கொண்டால் போதும், அந்த காரணத்தை நாம் சரி செய்தால் தலைவலியை குணப்படுத்த முடியும்.

வாசனை திரவியங்கள் :-

வாசனை திரவியங்களை பயனபடுத்துவதன் மூலமும் தலைவலி ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் :-

மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தலைவலி அதிகமாக இருக்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தால் தலைவலி ஏற்படாது.

கண்கள் :-

கண்களில் ஏற்படும் பிரச்சனைகளாலும் தலைவலி ஏற்படுகிறது. கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து தலைவலி ஏற்படக் காரணமாகிறது. இதனால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் தலைவலி வராமல் தடுக்க முடியும்.

சரியான தூக்கம் :-

அதிக வேலை, சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் தலை பாரமாக இருக்கும். வேலை இருந்தாலும் சரியாக தூங்கினால் தலைவலி ஏற்படாது.

டென்ஷன் :-

நாம் டென்ஷன் ஆகும் போது நம் தலை, நெற்றி மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகள் சுருங்குவதால் தலைவலி ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *