இனி கடையில் வாங்க வேண்டாம் இப்படி செய்து பாருங்க..!

இனி கடையில் வாங்க வேண்டாம் இப்படி செய்து பாருங்க..!

இன்றைய பதிவில் நாம் வீட்டிலே கடலை மாவு, அரிசி மாவு, எவ்வாறு தயார் செய்யலாம் என்று பாரக்கலாம். வீட்டிலே மிகவும் சுலபமாக கடலை மாவு, அரிசி மாவு, தயார் செய்யலாம். வீட்டிலே தயார் செய்து உணவு சமைக்கும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. எந்த விதமான கலப்படமும் இல்லாமல் வீட்டிலே தயார் செய்து ஆரோக்கியமான உணவை தயார் செய்து உண்ணும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அரிசி மாவு :

முதலில் அரிசி மாவு எவ்வாறு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

அரிசி மாவு தயார் செய்ய முதலில் ஒரு கப் பச்சை அரிசி எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பிறகு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் அரிசியை ஊற வைக்க வேண்டும். அரிசி ஊற வைக்கும் போது மாவு நன்றாக நைசா கிடைக்கும் சுவையும் அருமையாக கிடைக்கும்.

பிறகு தண்ணீர் நன்றாக வடிகட்டி காட்டன் துணியில் அரிசியை சேர்த்து இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்து சலிக்க வேண்டும்.

ஒரு கடாயில் சலித்த மாவு சேர்த்து மிதமான தீயில் அரிசி மாவு வறுக்க வேண்டும். மாவில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை வறுக்க வேண்டும். பிறகு ஆறவைத்து, மறுபடியும் சூடு படுத்திய அரிசி மாவை சலிக்க வேண்டு்ம். இப்போது அரிசி மாவு தயார்.

இவ்வாறு தயார் செய்த அரிசி மாவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி வைத்தால் ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். வீட்டிலே தயார் செய்த அரிசி மாவு ஆப்பம், இடியாப்பம், பலகாரம் என்று எல்லா உணவுக்கும் பயன்படுத்தலாம்.

கடலை மாவு :

இப்போது நாம் கடலை மாவு எவ்வாறு வீட்டிலே எளிமையாக தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு கடாயில் ஒரு கப் அளவில் கடலை பருப்பு சேர்த்து அடுப்பை முழுமையாக மெதுவாக தீயில் வைத்து வறுக்க வேண்டும். கடலை பருப்பு வறுக்கும் போது பருப்பு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். பிறகு அற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்து வைத்துள்ள கடலை மாவை ஒரு சல்லடையில் கொட்டி சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது எந்த விதமான கலப்படமும் இல்லாத கடலை மாவு வீட்டிலே தயார். தயார் செய்த கடலை மாவு காற்றுப்போகாத டப்பாவில் சேர்த்து வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *