இனி உங்க வீட்டிலும் காய்கறிகள் வாடாமல் சும்மா தகதகனு மின்னும்…

இன்றைய பதிவில் நாம் காய்கறிகள் கெடாமல் இருக்க சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம். காய்கறிகளை தினமும் ஒவ்வொரு காய்கறிளாக கடைக்கு சென்று வாங்க முடிவதில்லை. நாம் வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு அல்லது சந்தைக்கு சென்று நமக்கு தேவையான காய்கறிகள் வாங்கி வீட்டில் வந்து ஃபிரிட்ஜில் வைத்து விடுகிறோம். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றி காய்கறிகள் கெடாமல் இருக்க சூப்பர் ஐடியா பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இஞ்சி :

இஞ்சி வீட்டில் அதிகமாக பயனபடுத்துகிறார்கள். ஆனால் இஞ்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி வைத்தாலும், தோல் சுருங்கி வாடி விடும். அப்படி ஆகாமல் இருக்க இஞ்சி வாங்கி சுத்தமாக அதன் மேல் இருக்கும் மண் எல்லாம் கழுவி, சுத்தமான ஒரு காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு, வீட்டில் இருக்கும் நியூஸ் பேப்பரில் வைத்து மடித்து விட்டு அதன் மேல் நூலால் கட்டி வெளியில் வைத்தால் ரொம்ப நாள் ஆனாலும் கெட்டு போகாம இருக்கும்.

முருங்கைக்காய் :

முங்கைக்காய் ஒரு வாரம் வரை கெடாமல் ருசி மாறாமல் இருக்க, முருங்கைக்காயை அப்படியே நீள்வாக்கில் வைக்காமல் அதில் இருக்கும் காம்பு பகுதியை கட் பண்ணி, நமக்கு தேவையான அளவில் கட் பண்ணி நியூஸ் பேப்பரில் வைத்து சுத்திவிட வேண்டும். பிறகு சில்வர் டப்பாவில் வைத்து மூடி விட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்திற்கும் மேல் கெட்டு போகாமல் இருக்கும்.

முருங்கைக்காயை அப்படியே நீள்வாக்கில் வைக்கும் போது தளர்ந்துவிடும்.

கருணைக்கிழங்கு :

நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்த கலவையை சிறுது தயார் செய்து கொள்ளவும். பிறகு கருணைக்கிழங்கு மீது இந்த கலவையை கிழங்கு முழுவதும் பூசி 3 நிமிடம் ஆற விடவேண்டும். பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து சுற்றி விட வேண்டும். இவ்வாறு வைக்கும் போது 3 மாதங்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும்.

பச்சை மிளகாய் :

பச்சை மிளகாயில் முதலில் அழுகுவது காம்பு பகுதியே. பச்சை மிளகாயில் காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அடியில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மீது பச்சை மிளகாய் வைத்து பிறகு அதன் மீதும் டிஷ்யூ பேப்பர் வைத்து மூடி போட்டு குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பீட்ரூட் மற்றும் கேரட் :

பீட்ரூட், கேரட் எதுவாக இருந்தாலும் அதில் உள்ள காம்பு பகுதியை கட் பண்ணி வைத்தால் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும். கேரட் இரண்டு பக்கமும் கொஞ்சமாக கட் பன்னி பீட்ரூட், கேரட் இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் வைத்து அதன் மீது கவர் போட்டு கட்டி வைக்கலாம்.

தக்காளி :

தக்காளி வாங்கும் போது பாதி தக்காளி பழமாகவும், பாதி தக்காளி காய் பதத்தில் வாங்க வேண்டும். அப்பொழுதுதான் பழுத்த தக்காளி பயண்படுத்தி முடித்தவுடன் காய் தக்காளி பழுக்கும். தக்காளி எப்பவுமே ஸ்டோர் பன்னும் போது 4 பக்கமும் காற்று வரும்படி ஓட்டை இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் முதலில் காய் பதத்தில் இருக்கும் தக்காளியின் காம்பு பகுதியில் நல்லெண்ணெய் தடவி, காம்பு பகுதி பூமியை பார்த்தவாறு வைக்க வேண்டும். அதன் மேல் பழுத்த தக்காளி இவ்வாறு வைக்கும் போது 1 மாதம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

கீரைகள் :

நீங்கள் எந்த விதமான கீரை வாங்கினாலும் சரி, அந்த கீரையை மஞ்சள் கலர், பழுத்த நிறத்தில் இருக்கும் கீரைகள் நீக்கி விட்டு ஒரு சொம்பு எடுத்து அதில் சிறுது தண்ணீர் விட்டு வேர் கீரையின் வேர் பகுதி தண்ணீரில் படும் படி வைத்து விட்டு, அதன் மேல் கவர் போட்டு வைக்கலாம்.

இதே போல் கொத்தமல்லி யையும் சுத்தம் செய்து வைக்கலாம்.

தினசரி வருமானம் தரக்கூடிய சிறு தொழில். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *