இந்த மாதிரி வித்தியாசமா ஒரு முறை வடை செய்து பாருங்க உங்க வீட்டில் உங்களுக்கு பாராட்டு மழை தான் !!!

இந்த மாதிரி வித்தியாசமா ஒரு முறை வடை செய்து பாருங்க உங்க வீட்டில் உங்களுக்கு பாராட்டு மழை தான் !!!

இன்றைய பதிவில் நாம் வித்தியாசமாக இறால் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இறால் வடை செய்ய தேவையான பொருட்கள் :-

இறால் – 10

உடைத்த கடலை – ஒரு ஆழாக்கு

வெங்காயம் – 200 கிராம்

சோம்பு – 1 தேக்கரண்டி

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 5 பல்

பச்சை மிளகாய் – 5

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – அரை லிட்டர்

உப்பு – தேவையான அளவு

இறால் வடை செய்முறை :-

😋 முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து நன்றாக கழுவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.

😋 பிறகு வேகவைத்த இறாலை தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

😋 ஒரு மிக்சியில் உடைத்த கடலை அரைத்துக் கொள்ள வேண்டும்.

😋இறால் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

😋 பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

😋 பிறகு இஞ்சி, பூண்டு, சோம்பு நசுக்கிக் கொள்ளவும்.

😋 பிறகு அடுப்பில் வாணலியை வைத்து தாளிப்பதற்கு எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து சிவக்கும் வரை வதக்க வேண்டும்.

😋 பிறகு அரைத்து வைத்துள்ள இறாலையும், கடலையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

😋 பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வடை தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க வைத்து எடுத்து விட்டால் நமக்கு சுவையான இறால் வடை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *