இந்த டவுட் உங்களுக்கு இருக்கா ???

கொஞ்சம் யோசிங்க பாஸ் ….

🤔மிளகாய் பொடி மிளகாயில் இருந்து வருது…

🤔மஞ்சள் பொடி மஞ்சளில் இருந்து வருது…

🤔அப்படினா பல் பொடி பல்லுல இருந்து தானே வரனும்…

கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

நோயாளி :- பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவு ஆகும் டாக்டர்?

டாக்டர் :- 5 லட்சம் ஆகும்.

நோயாளி :- சரி, நாங்களே பிளாஸ்டிக் கொண்டு வந்தா எவ்வளவு குறைப்பீங்க?

டாக்டர் :- 😠😡😡

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇https://t.me/health_tips_tamil

கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

ரமேஷ் :- இ.பி.க்கு போன் பன்னி கரண்ட எப்ப வரும்னு கேட்டீயே என்ன சொன்னாங்க?.

சுரேஷ் :- அதுக்கு அவுங்க உன்னுடைய மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கானு கேக்கறாங்க..

ரமேஷ் :- 🤣🤣🤣

கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

சஞ்சு :- காலையில் ஓட்டலில் சாப்பிட்டு முடிச்சதும் சர்வர் வந்து டிப்ஸ் கேட்டாரு பா…

மஞ்சு :- எவ்வளவு கொடுத்த???

சஞ்சு :- அவுங்க ஓட்டலில் இட்லி மிருதுவா இல்லை. நா வெந்தயம் போட்டால் மிருதுவாக இருக்கும்னு டிப்ஸ் கொடுத்தேன். அதுக்கு போய் அந்த பயபுள்ள முறைக்கிறார் …

மஞ்சு :- 🤐🤐🤐

கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

விமல் :- மச்சி ரொம்ப நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன். குடிக்க டீ மட்டும் தானா மச்சி?

விக்கி :- வேற என்ன வேணும்.

விமல் :- குடிக்க சரி. கடிக்க எதாவது??

விக்கி :- நாய் இருக்கு… வர சொல்லட்டா???

விமல் :- 🙄🙄🙄

கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

மாமா :- ஏன்டா உங்க அப்பா பெயரை பிரஜ்ஜிக்குள் எழுதி வச்சு இருக்க ??

மச்சான் :- மாமா, அவர் தான் சொன்னாரு என் பேர் கெட்டுப்போகாம பார்த்துக்கோன்னு..!

கொஞ்சம் யோசிங்க பாஸ் ….

👉உடம்பு வலி இருந்தா அந்த இடத்துல “மூவ்” தடவனும்.

👉மனசுல வலி இருந்தா அந்த இடத்துல இருந்தே “மூவ்” ஆகனும்.

கொஞ்சம் யோசிங்க பாஸ் ….

👉எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க….

👉ஆனா எதையும் சாப்பிடாம இருந்தா அல்சர் வரும்னு சொல்றாங்க..!!!

உங்களுக்கு தெரியுமா???👇👇👇

நீங்களும் செய்யலாம் வீட்டிலே குளுகுளு மலாய் குல்பி

https://bit.ly/36oGWrn

சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!

https://bit.ly/35zJZN5

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்👇👇👇

https://bit.ly/3CedShZ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *