இட்லி மாவு புளித்துவிட்டாதா? அப்போ இதை செய்யுங்கள்!!!

இட்லி மாவு புளித்துவிட்டாதா? அப்போ இதை செய்யுங்கள்!!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருடைய வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான வீட்டில் ஃப்ரிட்ஜில் நிறைய பொருட்கள் வைக்கிறோம். அந்த வகையில் புதினா, தோசை மாவு, கருவேப்பிலை, இட்லி மாவை, தயிர் என்று நிறைய பொருட்களை வைக்கிறோம். நாம் ஃபிரிட்ஜில் பொருட்களை வைத்தாலும் அவை வீணாகிறது.

கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கெட்டுப்போகாமல் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

கருவேப்பிலை:-

கருவேப்பிலையை வாங்கி வந்தவுடன் ஃபிரிட்ஜில் வைக்காமல் அதை வெயிலில் நன்றாக காய்ந்த வைத்து பிறகு கருவேப்பிலையை காம்பில் இருந்து உருவி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிறகு குழம்பு தாளிக்கும் போது சட்னி, சாம்பார், குழம்பு, பொறியல் என்று எது தாளித்தாலும் கருவேப்பிலையை எடுத்து கையிலே நொறுக்கி உபயோகிக்கலாம். இவ்வாறு செய்யும் போது கருவேப்பிலையை யாரும் தூக்கி போட முடியாது. அதில் இருக்கும் அனைத்து மருத்துவ குணங்களும் நமக்கு கிடைக்கும்.

மாவு :-

ஃபிரிட்ஜில் வைத்துள்ள மாவு நன்றாக புளித்து விட்டால், ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து விட்டு அந்த மாவில் 1 லிட்டர் மாவு இருந்தால் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வேண்டும். பிறகு மாவு நன்றாக கலக்க கூடாது. லேசாக கலந்தால் மட்டும் போதும்.

பிறகு அந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும். இவ்வாறு செய்யும் போது மாவில் ஊற்றிய தண்ணீரானது மேலே தெளிந்து விடும்.

அந்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட்டு மீதமுள்ள மாவை தோசை செய்து சாப்பிடலாம்.

இவ்வாறு தண்ணீரை கீழே ஊற்றும் போதும் புளிப்பானது தண்ணீரிலே கீழே போய்விடுகிறது. இந்த மாவை இட்லி செய்ய முடியாது. தோசை மட்டுமே செய்ய முடியும்.

புதினா :-

புதினா இலைகளும் வெயிலில் காயவைத்து அந்த இலைகளை காலையில் டீ போடும் போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது.

காய வைத்த புதினா இலை, கருவேப்பிலை எதுவாக இருந்தாலும் வருடக்கணக்கானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *