அவசியம் காலையில் வெறும் வெறும் வயிற்றில் சாப்பிட 7 உணவுகள்..!

அவசியம் காலையில் வெறும் வெறும் வயிற்றில் சாப்பிட 7 உணவுகள்..!

நாம் எந்த உணவுகளை சாப்பிடுகிறோமோ அந்த உணவுகள் தான் நம் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவு மிக முக்கியமானது. காலையில் வெறும் வயிற்றில் பலர் டீ, காபி அருந்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் டீ, காபியை விட எந்த உணவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அருகம்புல் ஜுஸ்

நம் முன்னோர்கள் அருகம்புல் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் தான் அவர்கள் ஆனோக்கியாக நீண்ட நாட்கள் நோயின்றி இருந்தார்கள். அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் அருந்திவந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்பட்டு, செரிமான உறுப்புகள் மேம்படுகிறது.

தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்

தேன் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்று எல்லாருக்கும் தெரியும். தேனில் உள்ள கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கும் போது, உடலில் உள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேற்றப்பட்டு, உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை குடுக்கிறது.

பப்பாளி

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்களில் பப்பாளி ஒரு முக்கிய பழமாக உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், குடலியக்கத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து LDL எனும் கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பப்பாளி பழம் வருடம் முழுவதும் கிடைக்க கூடிய பழமாகவும், எளிதில் எல்லாராலும் வாங்கி சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது. எனவே பப்பாளி பழம் காலையில் வெறும் வயிற்றில சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த பழமாக உள்ளது.

ஊறவைத்த பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, புரோட்டீன், மாங்கனீசு, பைபர், நல்ல கொழுப்பு அமிலங்கள் சொல்லக்கூடிய ஒமேகா 3, ஒமேகா 6 அதிக அளவில் உள்ளது. நீண்ட உணவு இடைவெளிக்கு பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த உணவாக பாதாம் உள்ளது. பாதாம் தவறான வழியில் உட்கொண்டால் எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. எனவே கையளவு பாதாமை இரவு ஊறவைத்து, மறுநாள் ஊறவைத்த பாதாமில் இருக்கும் தோலை நீக்கி சாப்பிட வேண்டும். ஏனெனில் பாதாமில் தோலில் டானிக் என்னும் மூலப்பொருள் உள்ளது. அது பாதாமில் இருக்கும் சத்துக்கள் உடலில் சேருவதை தடுக்கிறது. எனவே ஊறவைத்த பாதாமை சாப்பிடும் போது தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது.

உலர் திராட்சை

உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது இதில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு உடனடி ஆற்றல் குடுத்து நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கிறது.

தர்பூசணி

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் மற்றொரு பழம் தர்பூசணி பழமாக உள்ளது. தர்பூசணி பழத்தில் 90% நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைடு உள்ளது. இது கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்வறட்சி தடுத்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. மேலும் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய லைகோபைன் உள்ளது. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

முளைக்கட்டிய பச்சைப்பயிறு

பச்சைப்பயிறு அப்படியே சமைத்து சாப்பிடுவதை விட முளைக்கட்டி சாப்பாடும் போது உடலுக்கு பல ஆரோக்கியம் கிடைக்கிறது. இதில் நார்சத்து, புரதம், வைட்டமின் டி, உள்ளது. இதன் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *