
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்…. இன்றைய பதிவில் நாம் உடல் எடையை குறைக்க சில வழிகள் பற்றி பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பது என்பது எல்லாருக்கும் கடினமான ஒன்று. ஆனாலும் சிலர் முயற்ச்சி செய்து உடல் எடையை குறைக்கின்றன. உடல் பருமனாக காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல், என்னவெல்லாம் கிடைக்கிறது அவையெல்லாம் சாப்பிடுவது. சரியான உணவை, சரியான நேரத்திற்கு சாப்பிட்டால் போதும் உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம்.
உடல் எடை குறைய சில வழிகள்:
டிப்ஸ் 1:

சிறுது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
டிப்ஸ் 2:

சீஸ் மற்றும் பட்டர் போன்ற கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, காய்கறி அல்லது பழங்களை சாலட்டுகளாக காலை மற்றும் இரவு வேலைகளில் சாப்பிடலாம்.
டிப்ஸ் 3:

தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை சாப்பிடலாம். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு உடலில் கொழும்பு சேராமல் இருக்கும்.
டிப்ஸ் 4:

பால், ஐஸ்கிரீம், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், குளிர்பானங்கள், இனிப்புப் பண்டங்கள் தவிர்க்கலாம்.
டிப்ஸ் 5:

கேழ்வரகு, கம்பு, கோதுமை, சோளம் இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றால் ஆன சப்பாத்தி இரவு உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
டிப்ஸ் 6:

அதிகமாக தண்ணீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. ஒவ்வொரு உணவிற்கு முன்பும் 1 டம்ளர் தண்ணீர் குடித்து கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது பாதி அளவு வயிறு தண்ணீரால் நிரப்பப்பட்டு, குறைந்தளவு உணவை எடுத்துக்கொள்வோம்.
டிப்ஸ் 7:

ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை தவிரத்து, பாதாம், முந்தரி, வேகவைத்த முட்டை, ஆப்பிள், பழ சாலட், ப்ரஷ் ஜுஸ், வாழைப்பழம் இந்த மாதிரி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
டிப்ஸ் 8:

உடற்பயிற்சியும் செய்து வந்தால் கலோரிகள் எரிந்து சீக்கிரமே உடல் எடை குறைந்து விடும்.
டிப்ஸ் 9:

கொள்ளு 1-2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு 1 டம்ளர் நீரில் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைப் பருகலாம்.
டிப்ஸ் 10:

தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலும்பிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வரலாம்.
இதையும் தெரிந்து கொள்வோம்
இதை செய்தாலே போதும்! நரை முடி இயற்கையாகவே கருப்பாக மாறும்
https://bit.ly/3vHC4Io
மாதம் 1 லட்சம் மேல் வருமானம் எடுக்க கூடிய தொழில்
https://bit.ly/34dVUzo
கடையில் வாங்கின இட்லி பொடி போல சூப்பரான சுவையான இட்லி பொடி இனி உங்க வீட்டில்….
https://bit.ly/34ekeBd
பாதாமை தினமும் இப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா???
https://bit.ly/3vGEner
குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!
https://bit.ly/3CedShZ
சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!
https://bit.ly/35zJZN5