500 ரூ முதலீட்டில் தினமும் 2000 ரூ லாபம் தரக்கூடிய தொழில்..!

500 ரூ முதலீட்டில் தினமும் 2000 ரூ லாபம் தரக்கூடிய தொழில்..!

இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தொழிலில் நாம் மிக சுலபமாக பொருளை தயார் செய்து பேக்கிங் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் எடுக்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் கருவேப்பிலை பவுடர் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். கருவேப்பிலை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இதில் நிறைய ஊட்டச்சத்து உள்ளது. ஆனால் கறிவேப்பிலை சாப்பிடாமல் தனியாக எடுத்து வைத்து விடுகிறோம்.

அதுவே கறிவேப்பிலை பொடியாக தயார் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும் நாம் தனியாக எடுத்து வைக்க முடியாது.

மூலப்பொருட்கள் :

கருவேப்பிலை பொடி தயார் செய்ய கருவேப்பிலை இலை தேவைப்படுகிறது.

தயார் செய்யும் முறை :

முதலில் கருவேப்பிலை வாங்கி, உருவிக்கொள்ளவும். பிறகு சுத்தமாக கழுவி தண்ணீர் எதுவும் இல்லாமல் வடிகட்டி, வெயிலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து பேக் செய்து உங்க பிராண்ட் பெயர் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யலாம்.

விற்பனை செய்யும் இடம் :

தயார் செய்த கருவேப்பிலை பவுடர் பாக்கெட் மளிகை கடைகளில், சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் ஸ்டோர்களில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், மூலிகை கடைகளில் விற்பனை செய்து அதிக லாபம் எடுக்கலாம்.

இந்த தொழிலில் கருவேப்பிலை பவுடர் மட்டும் இல்லாமல், முருங்கை இலை பவுடர், தக்காளி பவுடர், சுக்கு பவுடர், வெங்காயம் பவுடர், பூண்டு பவுடர் என்று தயார் செய்து அதிக லாபம் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *