7 நாட்களில் உங்களுடைய பாத வெடிப்பு சரியாக இப்படி பன்னால் போதும் !!!

7 நாட்களில் உங்களுடைய பாத வெடிப்பு சரியாக இப்படி பன்னால் போதும் !!!

நிறைய பேருக்கு பாத வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பாத வெடிப்பு சரியாக நிறைய வைத்தியம் செய்திருப்போம். ஆனால் வெடிப்பு மறைவதில்லை.

பாதத்தில் வெடிப்பு வர முக்கிய காரணம் உப்பு தண்ணீர் கால்களில் அதிகளவில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் வெடிப்பு, புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். இந்த பிரச்சனை குணமாக சில எளிய டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி:-

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பை நீக்கி உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

எண்ணெய் :-

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் சம அளவில் எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக குழைத்து வெடிப்பில் தடவி வரலாம். பேஸ்ட் காய்ந்த பிறகு கழுவினால் வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

எலுமிச்சை தோல்:-

பாதங்களில் எலுமிச்சைப் பழத்தோல் நன்றாக தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

பப்பாளி பழம் :-

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். பிறகு பாதத்தை தண்ணீரில் கழுவ வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்பு மறைந்து பாதம் ஜொலிக்கும்.

விளக்கெண்ணெய் :-

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைத்து, பிறகு பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கும்.

கடுகு எண்ணெய் :-

கடுகு எண்ணெய் தினமும் கால் பாதத்தில் தேய்த்து வந்தால் வெடிப்பு நீங்கி, மிருதுவாகும்.

உருளைக்கிழங்கு:-

உருளைக்கிழங்கு சிறிய சிறிய துண்டாக கட் பன்னி காய வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவை தண்ணீரில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து பாதம் மிளிரும்.

தேன், சுண்ணாம்பு:-

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாக குழைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சுடு தண்ணீர்:-

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறுது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பாதத்தை நன்றாக தேய்த்து கழுவினால் பாதம் அழகாகும்.

தேங்காய் எண்ணெய்:-

இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் வெடிப்பு நீங்கி வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *