1 மணி நேரத்திற்கே பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

1 மணி நேரத்திற்கே பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்..!

இன்றைய பதிவில் நாம் ரீபேக்கிங் தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை வீட்டில் இருந்தே குடிசை தொழிலாக செய்யலாம். இந்த பொருளுக்கு எப்பவுமே மார்க்கெட்டில் அதிக அளவு டிமாண்ட் உள்ளது. பொருளை தயார் செய்யாமல் மொத்தமாக வாங்கி ரீபேக் செய்தாலே நல்ல லாபம் எடுக்கலாம்.

இந்த பதிவில் தொழில் என்ன, எங்க இருந்து பொருளை மொத்தமாக வாங்கலாம், எப்படி இந்த தொழிலை செய்யலாம், லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் சந்தன வில்லை தொழிலை பற்றி பார்க்கலாம். சந்தன வில்லை மொத்தமாக வாங்கி பேக் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி பார்க்கலாம்.

சந்தன வில்லை க்கு எப்பவுமே மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ளது. ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாதம் மட்டும் இல்லாமல் எப்பவுமே விற்பனை ஆகும் பொருள். பூஜைக்கு மட்டும் இல்லாமல், அழகுகாகவும் சந்த வில்லை பயன்படுத்துகிறார்கள்.

சந்த வில்லை மொத்தமாக வாங்கும் போது 1 கிலோ, 5 கிலோ, 10 கிலோ இந்த மாதிரியான அளவில் கிடைப்பதில்லை. 50 கிலோ மொத்தமாக வாங்கும் போது நமக்கு வாங்கும் விலை குறைவாக கிடைக்கும்.

சந்தன வில்லையை மொத்தமாக, தயாரிக்கும் இடத்தில் இருந்து வாங்கலாம்.

வருமானம் :

மொத்தமாக வாங்கும் போது ஒரு கிலோ சந்த விலை விலை 45 ரூ கிடைக்கிறது. மொத்தமாக வாங்கி பேக்கிங் பாக்கெட்டில், பேக்கிங் டப்பாவில் பேக் செய்து விற்பனை செய்யலாம். பேக் செய்யும் போது 50கிராம், 100 கிராம் இந்த அளவுகளில், இல்லையென்றால் 10 சந்தன வில்லை, 20 சந்தன வில்லை என்று பேக் செய்து கடைகளில் விற்பனை செய்யலாம்.

இந்த தொழில் மூலம் தினமும் 3000 லாபம் எடுக்கலாம்.

விற்பனை செய்யும் இடம் :

பேக் செய்த சந்தன வில்லை பாக்கெட்டை மளிகை கடைகளில், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், பேன்சி ஸ்டோர்களில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *