ஹோட்டல் ஸ்டைல் சுவையில் தேங்காய் சட்னி இனி வீட்டிலே ஈசியாக செய்யலாம் !!!

ஹோட்டல் ஸ்டைல் சுவையில் தேங்காய் சட்னி இனி வீட்டிலே ஈசியாக செய்யலாம் !!!

தேங்காய் சட்னி அனைவருக்கும் பிடித்த சட்னியாகும். இந்த சட்னி எளிமையாக செய்யலாம். தேங்காய் சட்னிக்கென்றே தனி சுவை உள்ளது. தேங்காயில் அதிக சக்தி உள்ளது. இந்தப்பதிவில் நாம் ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி எவ்வாறு எளிமையாக செய்யலாம் என்று பார்க்கலாம்.

KuKuFM Download Link:

https://kukufm.page.link/inhiWfmVEomLE92J6

Get a 50% discount on the annual description’ Coupon: BIT200

தேவையான பொருட்கள் :

தேங்காய் ( துருவியது ) – 1 கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 சிறிய துண்டு

சீரகம் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

சட்னி தாளிப்பதற்கு :

கடுகு – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், தேவையான அளவு உப்பு, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள சடனியை அதில் சேர்த்து கிளறி, இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *