வீட்டில் இருந்தே தொழில் தொடங்க நினைத்தால் 500 ரூ முதலீடு போதும் !!!

வீட்டில் இருந்தே தொழில் தொடங்க நினைத்தால் 500 ரூ முதலீடு போதும் !!!

இன்றைய பதிவில் நாம் மார்க்கெட்டில் அதிக அளவு டிமான்ட் இருக்க கூடிய அருமையான தொழில் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை ஆரம்பிக்க அதிக அளவு முதலீடு தேவையில்லை. குறைந்த அளவு முதலீடு போதும். குறைந்த அளவு முதலீட்டில் பொருளை தயார் செய்து, பேக் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம். ஒரு சுலபமான முறையில் இந்த தொழிலை செய்யலாம். யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

இன்றைய பதிவில் நாம் இட்லி, தோசை மாவு தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். இட்லி மாவு, தோசை மாவு தொழில் அருமையான தொழில். நீங்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். இட்லி, தோசை மாவு மட்டும் இல்லாமல் சிறுதானிய மாவு, கம்பு மாவு, சோள மாவு, தினை மாவு, சிவப்பு அரிசி மாவு இந்த மாவு வகைகளும் நாம் தயார் செய்து விற்பனை செய்யலாம். அதிக மக்கள் வீட்டில் பாக்கெட் இட்லி, தோசை மாவு தான் பயன்படுத்துகிறார்கள். இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் பேக்கிங் பாக்கெட்டில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

முதலீடு செய்ய அதிக பணம் இல்லாதவர்கள் இட்லி மாவு தொழில் ஆரம்பிக்கலாம். இதற்கு தனியா மிஷின் எதுவும் தேவையில்லை.

மூலப்பொருட்கள்:

அரிசி

உளுந்து

வெந்தயம்

அரிசி 1 கிலோ எடுத்தால், உளுந்து 250கிராம் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இட்லி இன்னும் மிருதுவாக இருக்க, தோசை மொறு மொறுவென இருக்க 100 கிராம் ஜவ்வரிசி அல்லது 100 கிராம் அவல் சேர்த்து மாவு அரைக்கும் போது சூப்பரா இருக்கும்.

1 கிலோ அரிசி எடுத்து மாவு அரைக்கும் போது 3 கிலோ மாவு கிடைக்கிறது. 1 கிலோ அரிசிக்கு 60 ரூ செலவு ஆகிறது. 1 கிலோ மாவை 60 ரூ விற்பனை செய்தால், 3 கிலோவிற்கு 180 ரூ வருமானம் கிடைக்கிறது. லாபமா 120 ரூ லாபம் கிடைக்கிறது. மார்க்கெட்டில் அதிக கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த மாவு மளிகை கடைகளில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில். ஆன்லைன் ஸ்டோர்களில், சிறிய கடைகளில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *