
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
இன்று சமையல் குறிப்பு பதிவில் நாம் வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம். அல்வா என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் வாழைப்பழத்தால் அல்வா செய்து குடுக்கும் போது எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பழத்தை சாப்பிடும் போது பல நன்மைகள் கிடைக்கிறது. இனிமேல் வாழைப்பழத்தை வீணாக்காமல் வாயில் வைத்தவுடன் கறையும் வாழைப்பழ அல்வா செய்து அசத்தலாம்

வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 8
சர்க்கரை அல்லது நாட்டுச்சக்கரை- ஒரு கப்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 5
முந்தரி – 5
சோள மாவு – 5 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
🍌 முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாதாம், முந்தரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பிறகு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடு ஏற்றிக்கொள்ளவும்.
நெய் உருகியதும் நறுக்கிய பாதாம், முந்தரியை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
வாழைப்பழ விழுது பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை கிளற விடவேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து கிளறக் கொண்டே இருக்கவும். இடை இடையில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு நீர் சேர்த்து சோள மாவை கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்து வைத்துள்ள பாதாம் முந்தரியை சேர்த்து இறக்கவும்.
பிறகு அதை இறக்கி நெய் தடவிய பேனில் ஊற்றி பரப்பி, குளிர வைத்து, பின் துண்டுகளக கட் பன்னி பரிமாறலாம்.
இப்போது வாயில் வைத்தவுடன் கறையும் வாழைப்பழ அல்வா ரெடி.
கடையில் வாங்கின இட்லி பொடி போல சூப்பரான சுவையான இட்லி பொடி இனி உங்கள் வீட்டில்
பாதாமை தினமும் இப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா???
Short Channel
https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw
Telegram
https://t.me/business_insider_tamil
Channel link