ரொம்ப யோசிக்கக்கூடாது முடியுமா உங்களால் இதை கண்டுபிடிக்க

ரொம்ப யோசிக்கக்கூடாது முடியுமா உங்களால் இதை கண்டுபிடிக்க

விடுகதையின் விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளுது.

😆 போ வானு கூப்பிடுற இந்திய மாநிலம் எது ?

😆 பறிக்க பறிக்க பெரிதாகும் அது என்ன ?

😆 கோடி கோடியாய் வெள்ளிப்பணம், கிடக்குது வீதியிலே அது என்ன ?

😆 கூடவே வருவான் ஆனால் பேச மாட்டான். அவன் யார் ?

😆 யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் ஒன்று சேர்ந்தாலும் தூக்க முடியாது. அது என்ன ?

😆 உட்காரவே முடியாத தரை எது ?

😆 மீன்களில் நீந்த முடியாத மீன் எது ?

😆 சேமிக்க சொல்லும் உணவுப் பொருள் எது ?

😆 அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டான் அவன் யார் ?

😆 எந்த மாதத்தில் காசிக்கு செல்ல வேண்டும் ?

😆 கதவும் ஜன்னலும் இல்லாத ரூம் எது?

😆 அதிக weight தூக்குற பூச்சி எது ?

😆 பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது ?

😆 தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடித்தால் என்ன ஆகும் ?

😆 வேலைக்கு போற விலங்கு எது ?

😆 கிணறு நிறைய தண்ணீர் இருக்கும். ஆனால் காகம் குடிக்க தண்ணீர் இல்லை. அது என்ன ?

😆 வேலிக்குள்ள வெண்கல குண்டா அது என்ன ?

😆 அங்கமுத்து வாசலில் தங்கமுத்து காயுது. அதை எடுத்து வாயில் போட்டால் தாங்க முடியாது? அது என்ன ?

😆 சந்தையில் இருந்து வாங்கி வந்த இரண்டு மாட்டில் கருப்பு மாடு ஆத்துல போயிருச்சி, வெள்ளை மாடு வீட்டுக்கு வந்துருச்சி அது என்ன ?

😆 உயிர் இல்லாத நீதிபதியிடம் நியாயம் ஒழுங்காக கிடைத்தது? அது என்ன?

விடைகள் :

 1. Go வா
 2. பள்ளம்
 3. நட்சத்திரம்
 4. நிழல்
 5. யானையோட நிழல்
 6. புளியோதரை
 7. செத்துப்போன மீன்கள்
 8. சேமியா
 9. பந்து
 10. வைகாசி
 11. Mush room
 12. மூட்டைப்பூச்சி
 13. தொப்பை
 14. செலவாகும்
 15. பனி கரடி
 16. தேங்காய்
 17. நிலா
 18. மிளகாய்
 19. உளுந்து
 20. தராசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *