யாரும் அதிகம் தொடங்காத தொழில் மாதம் 50,000 வருமானம் எடுக்கலாம்…

யாரும் அதிகம் தொடங்காத தொழில் மாதம் 50,000 வருமானம் எடுக்கலாம்…

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கும் தொழிலுக்கு போட்டியே இல்லை. இந்த தொழிலை பற்றி கேள்விப்பட்டு இருக்க மாட்டீங்க. இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருளும் மிகவும் சுலபமாக கிடைக்கும். அதிக லாபம் தரக்கூடிய சூப்பரான தொழிலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளும் சுலபமாக கிடைக்கும். மிகவும் சுலபமாக கிடைக்கும் கருவேப்பிலை இலையை வைத்து கருவேப்பிலை பவுடர் தயார் செய்யும் தொழிலை பற்றிதான் பார்க்க போறோம்.

நாம் தினமும் உணவில் கருவேப்பிலையை கட்டாயம் பயன்படுத்துகிறோம். கருவேப்பிலையை தினமும் உணவில் பயன்படுத்த காரானம் கருவேப்பிலையில் பல நன்மைகள் இருக்கிறது, ஆனால் நாம் சாப்பிடாமல் தூக்கி வீசுகிறோம். அதில் இருக்கும் நன்மைகள் உடலுக்கு கிடைக்காமல் போகிறது. அதுவே கருவேப்பிலையை பொடி செய்து உணவுக்கு சேர்க்கும் போது ஊணவு சுவையாகவும், மணமாகவும் இருக்கும், கருவேப்பிலை தனியாக எடுத்து வைக்க முடியாது.

கர்வேப்பிலை பவுடர் செய்து விற்பனை செய்யும் போது பல மடங்கு லாபம் எடுக்கலாம்.

கருவேப்பிலை பவுடர் உபயோகிக்கும் இடங்கள் :

கருவேப்பிலை பவுடர் வீட்டில் மட்டும் இல்லாமல் மசாலா பொருட்கள் தயார் செய்யும் இடங்களில், அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் இடங்களில், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.

தேவைப்படும் சான்று :

இந்த தொழில் உணவு சம்மந்தமான தொழில் அதனால் FSSAI சான்று பெற்றிருக்க வேண்டும் மற்றும் GST எடுக்க வேண்டும்.

மூலப்பொருள் :

இந்த தொழிலை ஆரம்பிக்க முக்கிய மூலப்பொருளே கருவேப்பிலை தான். கருவேப்பிலை பவுடர் தயார் செய்து பேக் செய்ய பேக்கிங் கவர், சீலிங் மிஷின் தேவைப்படுது.

தயார் செய்யும் முறை :

முதலில் கருவேப்பிலை வாங்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு வீட்டில் இருக்கும் மிக்சியை வைத்து அரைத்து சலிச்சு 10கிராம், 20கிராம் அளவுகளில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

வருமானம் :

100 கிராம் பாக்கெட் அளவில் இருக்கும் கருவேப்பிலை பவுடர் பாக்கெட்டை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். 1 கிலோ பவுடர் 500ரூ விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கி 10 கிலோ விற்பனை செய்தால் 5000 ரூ வருமானம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த கருவேப்பிலை பவுடரை மளிகை கடை, ஓட்டல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், சூப்பர் மார்க்கெட்டில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *