
இன்றைய சுற்று சூழலில் முடிக்கு பல பிரச்சனை வருகிறது. முடி வளர பல வைத்தியங்கள், பல வகையான எண்ணெய் வாங்கி உபயோகிக்கிறார்கள். ஆனால் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை வைத்து நம் வீட்டிலே பல வகையான வைத்தியங்கள் செய்யலாம். இவ்வாறு செய்தாலே முடி வளரும்.அவற்றில் சில வைத்தியங்களை இங்கு பார்க்கலாம்.
1. சமச்சீரான உணவு

நம் உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரஞ்சு, மீன், எலுமிச்சை, பருப்பு வகைகள், முட்டை, பாதாம், வேர்க்கடலை போன்ற உணவுகளை சாப்பிடலாம். தயிர், மோர் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் முடியை அடர்த்தியாக்கவும், வலிமையாக்கவும் உதவுகிறது.
2. முடியை அலசும் முறை

வாரத்திற்கு ஒரு முறை பால், தயிர், சீயக்காய் அல்லது முல்தானி மெட்டி போன்றவற்றை நீரில் கலந்து முடியை அலசலாம்.
3. எலுமிச்சை அல்லது நெல்லிக்காய்

2 டீஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து தலை முடியில் தடவ வேண்டும். பின் நன்றாக காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
இதுவரை நீங்கள் கேள்விப்படாத புதுமையான தொழில்
4. வெந்தயம்

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு சீயக்காய் கொண்டுதலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
5. முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு, செம்பருத்தி பூ, மருதாணி இலை போன்ற பொருட்களை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊறவைத்து அதன் பிறகு தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு பன்னும் போது தலை முடி அடர்த்தியாக, கருமையாக வளரும்.
6. கறிவேப்பிலை

கறிவேப்பிலை அரைத்து காய வைத்த தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வரலாம்.
7. நெல்லிக்காய்

1 லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் நெல்லிக்காய் பொடி, மருதாணி பொடி, கருவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ், சந்தன பொடி ஆகியவற்றை 10 கிராம் எடுத்து எண்ணெயில் நன்றாக கொதிக்க வைத்து வெயிலில் வைத்து அதன் பிறகு வெள்ளைத் துணியில் வடிகட்டி குளிக்கும் முன் தலையில் தேய்த்து குளிக்கலாம்.
8. ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை 15 நிமிடம் தலையில் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊறவைத்து அதன் பிறகு மிதமான சுடு நீரில் தலைக்கு குளிக்கலாம்.
9. பூண்டு, கொத்தமல்லி

பூண்டு, கொத்தமல்லி சாற்றை எடுத்து தலையில் தேய்த்து சில நிமிடங்களுக்கு பிறகு குளித்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
10. சடா மஞ்சள்

சடா மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
தெரித்து கொள்வோம்!!!!
7 நாட்களில் உடல் பருமனை குறைக்க சிறந்த எளிய வழிகள்
வாழைப்பழ அல்வா செய்முறை