மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் செல்ல முடியும்!!!

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் செல்ல முடியும்!!!

நாம் சில கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து, அந்த கோவிலுக்குள் செல்ல பல முயற்சிகள் செய்தாலும் அங்கு போக முடியாத படி பல தடைகள் ஏற்படும். ஆனால் ஒரு சில கோவிலுக்குள் போக வேண்டும் என்று நினைத்த உடனே சென்றிடுவோம். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் கோவிலுக்குள் யார் நினைத்தாலும் அவ்வளவு எளிதாக அந்த கோவிலுக்குள் அடி எடுத்து வைக்க முடியாது.

அந்த ஈசனே அனுமதி தந்து மீண்டும் பிறவா நிலை ( மறுபிறவி ) இல்லாத மானிடர்களால் மட்டும் தான் இந்த கோவிலுக்குள் நுழைய முடியும். மறுபிறவி இருப்பவர்கள் யார் நினைத்தாலும் இந்த ஈசனை வழிபட நினைத்தால் பல தடைகள் ஏற்படும். எப்பேற்பட்ட அகத்திய மா முனியே இந்த கோவிலில் இருக்கும் ஈசனின் பெருமையை கேள்விப்பட்டு ஆலயத்திற்குள் நுழைய முயற்சி செய்த போது, கோவிலுக்குள் அடி எடுத்து வைக்க முடியாத படி திரும்பி சென்றார்.

ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் நல்ல பாம்பு வில்வ இலைகளை கொண்டு வந்து இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கத்திற்க்கு அர்ச்சனை செய்து, அதன் தோலையே உறித்து மாலையாக அனிவித்து, சிவ பெருமானை வணங்கி விட்டு செல்வது இந்த கலியுக காலத்திலும் இந்த கோவிலில் நடக்கிறது. இந்த செயல் மிகப்பெரிய அதிசயமாகும்.

ஆகம விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் எங்கு அமைந்துள்ளது, ஏன் இந்த கோவிலுக்குள் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்று பல அதிசயங்கள், மர்மங்கள் நிறைந்த இந்த கோவிலில் புராண முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும், மகா பிரலயத்தின் போதும் இந்த ஆலயம் மட்டும் ஏன் மூழ்காமல் இருந்ததற்கு என்ன காரணம், அகத்தியர் ஏன் இந்த கோவிலுக்குள் செல்ல முடியவில்லை என்று பல சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அரிதினும் அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது. மானிட பிறவி தான் இந்த பிரபஞ்சத்திலே உயர்ந்த பிறவி என்று பாடல் பாடி உள்ளார்கள். இருப்பினும் மானிடபிறவியிலும் அறிதான பிறவி மறு பிறவி இல்லாமல் பிறப்பது. பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பம், துன்பம் எல்லாவற்றையும் அனுபவித்து பாவ கணக்கு, புண்ணிய கணக்கு சரி சமமாக கர்ம வினைகள் ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

இப்படி மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழையக்கூடிய மகிமை வாய்ந்த திருத்தலம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள தேப்பெருமாநல்லுர் விஸ்வநாத சுவாமி திருக்கோவில்.

இந்த கோவிலோட கர்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டுள்ளது. தினமும் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் இந்த கோவிலில் மூலவரான சிவலிங்கத்தின் மீது விழுந்த பிறகுதான் கோவிலையே திறப்பார்கள். வருடத்தின் 365 நாட்களும் சூரியனின் கதிர்கள் இந்த தேப்பெருமாநல்லுர் விஸ்வநாத சுவாமி மீது படும் படி கிழக்கு வாசலை அமைத்து உள்ளார்கள்.

இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு சிலைகளும் மற்ற கோவில்களை விட முற்றிலும் மாறுபட்டு உள்ளது. எதனால் இந்த கோவில் இத்தனை சிறப்பு வாய்ந்தது மறுபிறவி இல்லாதவர்களுக்கும், இந்த கோவில் எப்படி தொடர்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.

தன் கடமையில் இருந்து சிறிதும் தவறாமல் இருப்பவர்கள் தான் சூரிய புதல்வர்களான சனியும், எமனும். யாரையும் விட்டு வைக்காத சனி பகவான், சிவ பெருமானை நெருங்கும் நேரம் வந்ததும் ஆதி சக்தியான பார்வதி தேவியிடம் சென்று, நாளை காலை 7.15 நாழிகைக்குள் ஈசனை பிடிப்பதாக கூறி இருக்கிறார். இதை கேட்டததும் பார்வதி தேவிக்கு கடுமையான கோபம் வந்ததது. தன்னுடைய வேலையை சரியாக செய்யும் சனிபகவான், மறுநாள் ஈஸ்வரரை தேடி செல்லும் போது பார்வதி தேவி எப்படியாவது, சிவ பெருமானை சனியோட பிடியில் இருந்து காப்பாற்ற ஒரு அரச மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளுமாறு கூறினார். இவர்களும் அந்த அரச மரத்தை பார்த்து நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு சென்ற சனிபகவான் அம்மன் அரச மரத்தடியில் நிற்பதை பார்த்து, ஈஸ்வரர் எங்கு இருக்கிறார் என்பதை உணர்ந்து, இவரும் அங்கேயே நிற்கிறார். சனி பகவான் சொன்ன 7.15 நாழிகை கழிந்த பிறகு, அந்த இடத்தை விட்டு சனிபகவான் மெதுவாக நகர்ந்தார்.

அப்போ பார்வதி தேவி சனி பகவானை பார்த்து, ஈஸ்வரரை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து இந்த இடத்து விட்டு செல்கிறாயா? என்று கேட்டார். அதற்கு சனி பகவான், அன்னையே நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரரையே எந்த வேலயும் செய்ய விடாமல், அரச மரத்திற்கு பின்னால் ஒளிந்து இருந்தார். அந்த நேரம் தான் நான் அவரை பிடித்த நேரம் அதுவும் உங்களின் உதவியுடன் என்று சனிபகவான் ஆனவத்துடன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து அம்மன் முன் நின்றார். சனி பகவான் ஆனவத்தோடு பேசும் பேச்சை கேட்டு, அரச மரத்திற்கு பின்னால் இருந்த ஈஸ்வரர் வெளிப்பட்டு, மகா மந்திர பைரவ அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாக பிளந்து இருக்கிறார். இரண்டாக பிளகாகப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி ஈஸ்வரனே நீங்கள் வகுத்து குடுத்த சட்டம் படி தான் நான் நடக்கிறேன். நான் இல்லை என்றால் பூலோக வாசிகள் அவர்களின் விருப்பபடி, ஆனவத்தோடு நடப்பார்கள். இதனால் இவ்வுலகில் நிறைய தப்பானவர்கள் பெரிகிடுவார்கள். நான் உங்களிடம் ஆனவத்தோடு நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து என்னை பழைய மாதிரி மாற்றுங்கள் என்று மன்னிப்பு கேட்டார்.

அவரோட மன்னிப்பு ஏற்று இரு கூறான உடலை ஒன்று சேர்த்து சனி பகவானுக்கு அருள் புரிந்தார். தேப்பெருமாநல்லுரில் ஆணவம் நீங்கிய சனி பெருமானினை வணங்கினால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சிவ பெருமான் மகா மந்திர பைரவராக விஸ்வரூபம் எடுத்ததால் இந்த உலகமே பிரலயத்தில் மூழ்க ஆரம்பித்தது. அப்போ பார்வதி நான்கு வேத மந்திரங்களை சிவபெருமானுக்கு உபதேசித்து அமைதி அடைய செய்திருக்கிறார். இதனால்தான் பார்வதி தேவிக்கு வேதாந்த நாயகி என்ற பெயர் ஏற்பட்டது. தன்னோட கடமையை ஈஸ்வரர் என்றும் கூட பார்க்காமல் சரியாக செய்த சனிபகவானுக்கு, தனக்கு நிகரான ஈஸ்வரர் என்ற பட்டம் குடுத்து கௌரவப் படித்தி இருக்கார் சிவபெருமான். சனி பகவானுக்கே தண்டனை குடுத்து இரண்டாக பிரிந்ததால், சிவ பெருமான் இனி அவதாரம் எடுக்க முடியாது என்று அந்த இடத்திற்கு வந்த நாரதர், சிவனுக்கு அவர் செய்த தவறை உணர்த்தினார். இனி சிவன் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்றால் பனிரெண்டு ஜோதி லிங்கங்களையும் ஒரு சேர தரிசித்தால் மட்டும் தான் சிவனால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று நாரதர் கூறினார். இதை கேட்டதும் சிவபெருமான் பனிரெண்டு ஜோதி லிங்கங்களையும் அழைக்க, பனிரெண்டு பேரும் ஒரு சேர காட்சிகுடுத்து ஈசனோட சாபமும், பாவமுன் நீங்கப்பட்டது.

இதை பார்த்த நாரதர் இவர்கள் பனிரெண்டு பேரில் ஒருத்தரை பார்த்தால் கூட பாவமும், சாபமும் நீங்கி விடும் என்றார். பனிரெண்டு பேரும் இந்த திருத்தலத்தில் வந்து இறங்கியதால் இந்த திருத்தலம் மிகவும் அதிசயமான திருத்தலமாக, பனிரெண்டு ஜோதி லிங்கங்களும் தரிசனம் குடுத்து புண்ணிய ஸ்தலம் என்பதால், ஏழு ஏழு ஜென்மத்துக்கும் புண்ணியம் செய்தவர்களும் மறு பிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் வந்து இங்கு உள்ள ஈசனை தரிசனம் செய்ய முடியும் என்று நாரதர் கூறினார். அதுல ஒரு ஜோதி லிங்கமான காசி விஸ்வனாதன், விசாலாட்சியுடன் இந்த தேய்ப்பெருமாநல்லூர் திருத்தலத்திலே தங்கிவிட்டார்.

அடுத்து அகத்தியர்க்கு ஏற்பட்ட தடை பற்றி பார்க்கலாம். பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள் தரிசனம் குடுத்த இந்த திருத்தல ஈசனை தரிசிக்க அகத்தியர் இந்த இடத்திற்கு வரும் போது, அகத்தியர்க்கு மறு பிறவி உண்டு என்பதை தெரிந்து கொண்ட சிவ பெருமான் அகத்தியர் இந்த கோவிலுக்குள் வராமல் இருக்க அவரை தடுக்க நினைத்தார். அதனால் மகரந்த மகரிஷியை கூப்பிட்டு அகத்தியர் வருகையை தடுக்க கட்டளையிட்டார். ஈசனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி அகத்தியர் நடந்து வரும் பாதையில் நடக்கமுடியாமல், மகரந்த முட்களாக மாறி அவர் வரும் வழியை அடைத்துக்கொண்டார். வழி மறைத்த மகரந்த மலர்களை, தனது ஞான திருஷ்டியால் பார்த்த அவர் இந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை தெரிந்துக்கொண்டார். மகரிஷிய நான் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும் எனக்கு வழி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மகரந்த மகரிஷி வழி விட மறுத்ததால் கோபத்தில் அகத்தியர், பூபோல இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும் என்று சாபம் தந்தார். அகத்தியரின் சாபமும் பலித்து யாழி முகமாக மாறியது. அதற்கு மகரந்த மகரிஷி, மாமுனிவரே இதை நான் செய்யவில்லை ஈஸ்வரனின் கட்டளையால் தான் நான் உங்களுடைய வழியை மறைத்தேன், உங்களுக்கு மறு பிறவி உள்ளதால் நீங்கள் இந்த கோவிலில் இருக்கும் ஈசனை தரிசிக்க முடியாது என்று, என்னுடைய சாபத்திற்கு விமோச்சனம் குடுங்கள் என்று கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், மகரிஷி நான் குடுத்த சாபத்தில் இருந்து விடு பட உலகத்தில் யாருமே பூஜை செய்யாத ஒரு பொருளை கொண்டு இறைவனை பூஜை செய்தால் உங்களுடைய சாபம் நீங்கிவிடும் என்று கூறிவிட்டு வந்த வழியே திரும்பி சென்றார் அகத்தியர். மகரிஷி தேப்பெருமாநல்லுர் விஸ்வநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்து யாழி முகத்துடன் பூஜை செய்ய ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் புதிய புதிய மலர்களை தொடர்ந்து 50 வருடங்கள் பூஜை செய்து வந்தார். ஒரு நாள் சுவாமிக்கு பூஜை செய்யும் போது அவர் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மாலை அருந்து சுவாமியின் மீது விழுந்தது. அப்போ இறைவன் ஜோதி வடிவமாக காட்சி தந்து மகரந்த மகரிஷியோட சாபத்தை நீக்கினார். மகரிஷியின் சாபம் நீக்கியதால் இந்த திருத்தலத்தில் உள்ள சிவனுக்கு ருத்திராட்ச மாலை அணிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *