மன உளைச்சலை நீக்கி மனநிம்மதி தரும் தர்ப்பை புல் பாய் ..!

பழங்கால வாழ்க்கை முறையை நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்குறது. இது உணவு பழக்கவழக்கம், உடை, வீடு என்று பல விதமாக மாறிவிட்டது. பழங்கால வாழ்க்கை முறையில் நவீனம் என்ற பெயரில் நாம் பாயில் தூங்குவதற்கு பதிலாக கட்டிலும், மெத்தையும் கொண்டு உறங்குகிறோம். பாயில் படுத்து உறங்கும் போது பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

தர்ப்பைப் புல் பாயில் நோய் எதிர்ப்பு சக்தியும், பல மருத்துவ குணங்களும் உள்ளது.

👉 இந்தப் பாயில் படுத்து உறங்கினால் சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கிறது.

👉 தர்ப்பைப் புல், வெட்டி வேர் நீரில் கலந்து குடித்தால் கிட்னியில் இருக்கும் கல் கறையும்.

👉 தர்ப்பைப் புல்லால் செய்யப்பட்ட பாயில் உறங்கினால் உடல் சூடு தணிந்து, நல்ல உறக்கம் கிடைத்து நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும்.

👉 ஆண்டு முழுவதும் வைத்து பயன்படுத்தி வரும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் தர்ப்பைப் புற்கள் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

👉 அடர் மஞ்சள் நிறத்தோடு, எரிச்சலோடு சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல் எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குடித்தால் இந்த பிரச்சனைகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *