இன்று நாம் முற்றிலும் புதுமையான தொழில் பற்றி தெரிந்து கொள்ளபோகிறோம். பழைய நியூஸ் பேப்பரை மொத்தமாக வாங்கி கட் பன்னி விற்பனை செய்ய போறோம் (Papper Sherdding Business).
இந்த கட் பன்ன பேப்பரை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பீர்கள்? இந்த கட் பன்ன பேப்பரை நிறைய நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்கலாம். பரிசு பொருட்கள், பொம்மை, கண்ணாடியால் செய்த பொருட்கள், பழங்கள், மண்பாண்டங்களால் ஆன பொருட்களை பேக்கிங் செய்ய, வெளிநாட்டுக்கு பொருட்களை பேக்கிங் செய்து அனுப்புவதற்கு இந்த கட் பன்ன பேப்பர் அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்த தொழிலை தமிழ்நாட்டில் அதிகமா யாரும் செய்யாத தொழில், அதனால் இந்த தொழிலுக்கு போட்டி என்பது மிக மிக குறைவு.
கட்டிட அமைப்பு:-
இந்த தொழிலை ஆரம்பிக்க 10×10 அளவு கொண்ட ஒரு சிறிய அரை இருந்தால் போதும்.
மூலப்பொருட்கள்:-
இந்த தொழிலை ஆரம்பிக்க பழைய நியூஸ் பேப்பர் தான் தேவைப்படுகிறது. இந்த நியூஸ் பேப்பரின் விலை 1 கிலோ 5 ரூ முதல் கிடைக்கிறது. இந்த நியூஸ் பேப்பரை மொத்தமாக வாங்கி கட் பன்னி விற்பனை செய்யலாம்.
இயந்திரம்:-

இந்த தொழிலுக்கு Papper Sherdding Machine தேவைப்படுகிறது. இந்த இயந்திரம் 25,000 ரூ முதல் கிடைக்கிறது.
https://m.indiamart.com/city/coimbatore/paper-shredding-machine.html
சந்தை வாய்ப்பு :-
இந்த கட் பன்ன பேப்பரை குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, ஈரோடு, சேலம், கோயமுத்தூர் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். நாட்டில் அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் இருப்பதால் தயக்கம் இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
Channel link:-
https://youtube.com/c/businessideasintamil
மாதம் 1 லட்சம் லாபம் தரக்கூடிய தொழில் | தங்கத்துக்கு நிகரான தொழில்
வாங்கி விற்றால் போதும் மாதம் ₹20,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம்