பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்க சிறந்த தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்க சிறந்த தொழில்..!

இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழிலைப் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை வீட்டில் இருக்கும் வேலையை முடித்துவிட்டு சும்மா இருக்கும் நேரத்தில் செய்யலாம்.

தொழில் :

இந்த தொழிலில் நாம் தலையணை தயாரிப்பு தொழிலை பற்றி பாரக்கலாம். தலையணை உறை தயார் செய்ய நமக்கு எந்த விதமான பயிற்சியும் தேவையில்லை. ஒரு சில தையல் வேலை தெரிந்தால் மட்டும் போதும்.

இதற்கு புது தையல் மிஷின் வாங்க வேண்டாம். பழைய தையல் மிஷின் வாங்கி போட்டால் போதும். தலையணை உறை தயார் செய்ய ஒரு மணி நேரம் பயிற்ச்சி எடுத்தால் போதும்.

தொழில் ஆரம்பிக்க தேவையான பொருட்கள் :

தலையணை உறை தயார் செய்ய துணி

தையல் மிஷின்

கத்தரி

உறை தயார் செய்யும் முறை :

தலையணைக்கு ஏற்ற அளவில் துணிகளை வெட்டி, மூன்று புறமும் இரண்டு துணியை சேர்த்து தைக்க வேண்டும். மறுபுறம் தலையணை சேர்க்க உட்புறமாக துணியை உட்புறமாக மடித்து தைக்க வேண்டும்.

லாபம் :

இந்த தொழிலில் ஒரு மாதத்திற்கு 20,000 வரை லாபம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த தலையணை உறை ஜவுளி கடைகளில், மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *