புதிதாக என்ன தொழில் செய்யலாம் !!!

புதிதாக என்ன தொழில் செய்யலாம் !!!

நாம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கிப்போடும் பொருளில் இருந்து அருமையான தொழில் செய்யலாம். இந்த தொழிலுக்கு அதிகமான முதலீடும் வேண்டாம். ஒரு குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

இன்றைய பதிவில் நாம் பேப்பர் பேக் தொழிலை பற்றி பார்க்கலாம். கடைகளில், சந்தைகளில் பாலித்தீன் மற்றும் பேக்கிங் கவர் உபயோகிப்பதில்லை, அதற்கு பதிலாக பேப்பர் பேக் உபயோகிக்கிறார்கள். நாம் இந்த தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

பேப்பர் பேக் தொழிலை இரண்டு விதமாக செய்யலாம். ஒன்று இயந்திரம் மூலம் பேப்பர் பேக் தயாரித்து விற்பனை செய்யலாம். இரண்டாவது பேப்பர் பேக் வீட்டிலே கைகளால் தயாரித்து விற்பனை செய்யலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

முதலீடு:-

இயந்திரம் மூலம் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்றால் பேப்பர் பேக் மேக்கிங் மிஷின் உள்ளது. இயந்திரத்தின் விலை 2 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது. மூலப்பொருள், இயந்திரம், ஷெட் அமைக்க எல்லா செலவும் சேர்த்து 2.50 லட்சம் முதலீடு தேவை.

நீங்கள் கைகளால் பேப்பர் பேக் தயாரிக்கிறீர்கள் என்றால் வீட்டிலே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம், மூலப்பொருளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும்.

மூலப்பொருள் :-

பேப்பர் பேக் தயாரிக்க பிரவுன் கிராஃட் பேப்பர் ரோல், கம், பேப்பர் பன்ச் மிஷின், பேப்பர் பேக் கைப்பிடி, கத்தரிக்கோல் இந்த பொருட்கள் தேவைப்படுகிறது.

தயாரிக்கும் முறை :-

பேப்பர் பேக் 13.5 செ.மீ, 15.5 செ.மீ இந்த அளவுகளில் கிடைகிறது. இதற்கு தேவையான அளவுகளில் நாம் பேப்பர் கட் செய்து கம் ஒட்டி கைப்பிடி செய்து விற்பனை செய்யலாம்.

சந்தை :-

தயாரித்த பேப்பர் பேக் காய்கறி கடைகளில், புத்த கடை , கிப்ட் கடை, பேக்கரி, மெடிக்கல், செப்பல் கடை, துணிக்கடை, பேன்சி ஸ்டோர் இந்த இடங்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *