நாவில் எச்சில் ஊறும் நெய் கோழி வறுவல்

அசைவ உணவு என்றாலே எல்லாருக்கும் பிடித்த உணவு. சைவ உணவு சாப்பிடுபவர்களை விட அசைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தினம் தினம் எதாவது ஒரு அசைவ உணவு இருக்க வேண்டு்ம்.

இன்றைய பதிவில் நாம் நாவில் எச்சில் ஊறும் நெய் கோழி வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil

நெய் கோழி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:-

கோழிக்கறி – முக்கால் கிலோ

நெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – தேவையான அளவு

வெங்காயம் – 2

காய்ந்த மிளகாய் – 12

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

தனியா – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 7 பல்

இஞ்சி – ஒரு துண்டு

தயிர் – 1 கப்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை பழம் – அரை பழம்

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :-

🥣 முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, தனியா சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் வறுத்த பொருட்கள் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

🥣 பிறகு கோழிக்கறியை சுத்தம் செய்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா, சிறிது மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

🥣 அடுப்பில் கடாயில் வைத்து கடாய் சூடு ஆன பிறகு, நெய் ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

🥣 பிறகு ஊறவைத்த கோழிக்கறியை அதனுடன் சேர்த்து கிளறவும்.

🥣 பிறகு அதனுடன் சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

🥣 பிறகு வறுவல் பக்குவத்திற்கு வந்த பிறகு சிறிது கொத்தமல்லி, நெய் சேர்த்து பரிமாறவும்.

😋 இப்போது சுவையான நெய் கோழி கறி வறுவல் தயார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *