
தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் கொழுப்பின் காரணமே. கொழுப்பு எதனால் வருகிறது என்றால் பலர் அதிக அளவில் உணவு சாப்பிட்டு, குறைந்த அளவில் வேலை செய்வதால் நம் உடம்பில் கொழுப்பு சேர்கிறது. இந்த பிரச்சனை பலருக்கும் உண்டு. உடலில் உள்ள கொழுப்பை குறைத்தால், தொப்பை குறையும். அவ்வாறு தொப்பையை குறைக்க உதவும் சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்!!!
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
தூக்கம்

இரவு நேரங்களில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பதன் மூலமும் தொப்பை ஏற்படுகிறது.
வெந்நீர்

எண்ணெய் உணவுகள், அதிக இனிப்பு வகைகள் சாப்பிடும் போது அவை உடலில் சென்று கொழுப்பாக மாறுகிறது. அவ்வப்போது வெந்நீராக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்பை சேர விடாமல் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
எலுமிச்சை ஜூஸ்

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் வயிற்றைச் சுற்றி இருக்கும் கொழுப்பு கரையும்.
அருகம்புல் சாறு

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும், உடல் எடையும் குறையும்.
தயிர்

தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. தயிரை தினமும் உண்பதன் மூலம் செரிமான பிரச்சனை இருக்காது, தொப்பையை குறைக்கலாம்.
7 நாட்களில் உடல் பருமனை குறைக்க சிறந்த எளிய வழிகள்
காபி அல்லது டீ

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறுது பட்டை தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து, உடல் எடையும் தொப்பையும் கறையும்.
பூண்டு

தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடலாம். எலுமிச்சை சாற்றை விட பூண்டில் அதிக சக்தி உள்ளது. பூண்டை சாப்பிடும் போது இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதன் மூலம் நல்ல பலனை காணலாம். ஜாகிங், சைக்கிலிங் இரண்டுமே சிறந்த உடற்பயிற்சி ஆகும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து நடை பயிற்சி செய்யலாம்.
காய்கறிகள்

உணவில் பச்சை காய்கறிகள் ப்ராக்கொலி, பாகற்காய் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடிக்கும் போது உடல் எடை குறைவதோடு, தொப்பையும் குறையும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்

ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் தொப்பை குறையும்.
சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!
