தினசரி வருமானம் தரக்கூடிய சிறு தொழில். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்…

இன்றைய காலத்தில் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். அதுவும் தினமும் வருமானம் தரக்கூடிய, குறைந்த முதலீடு செய்யும் தொழிலாக இருந்தால் சூப்பராக இருக்கும். அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கும் கரும்பு ஜுஸ் தயாரிப்பு பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இந்த கரும்பு ஜுஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கரும்பு ஜூஸ் மெஷின் மூலமா தயாரிக்கலாம். குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் எடுக்கலாம். இப்போ இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான இயந்திரம்:-

கரும்பு ஜூஸ் மெஷின் சிறிய அளவு இயந்திரம் முதல் பெரிய அளவு இயந்திரம் வரை கிடைக்கிறது. 18,000 முதல் 65,000 வரை கிடைக்கிறது. இந்த இயந்திரம் ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கிக்கலாம்.

தேவையான மூலப்பொருட்கள்:-

கரும்பு ஜூஸ் தயார் செய்ய முக்கியமாக கரும்பு தேவைப்படுகிறது. அடுத்ததாக கிளாஸ், ஸ்ட்ரா தேவைப்படுகிறது.

முதலீடு :-

இயந்திரம், கரும்பு, மூலப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 1 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது.

வருமானம் :-

ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு கிளாஸ் தயார் செய்ய 3 ரூபாய் செலவு ஆகிறது. லாபமாக ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் க்கு 17ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 150 கிளாஸ் கரும்பு ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்தால் 2,550 வருமானம் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு :-

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேஷன், திருவிழாக்கள், கடற்கரை ஓரம் இந்த இடங்களில் ஆரம்பிக்கலாம்.

மாம்பழ பேரீச்சம்பழம் ஸ்மூத்தி

கடலின் பயங்கர ஆழத்தில், கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்று தெரியுமா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *