தப்பித் தவரியும் கர்பக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான காலகட்டம் கர்பக்காலம் தான். பெண்கள் கர்ப்பம் தரித்தால் வீட்டில் உள்ள அனைவருக்குமே அளவில்லா மகிழ்ச்சி. அந்த கர்ப்ப காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சில உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். அந்த உணவு பட்டியலை இப்போது பார்க்கலாம்.

1. இறைச்சி

அதிகமாக சிக்கன், ஹாட் டாக், டர்கி பயண்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக வாங்கி உண்ணக்கூடாது. சிக்கனை தவிர்த்து நாட்டுக்கோழி சாப்பிடலாம்.

2. காய்ச்சாத பால்

காய்ச்சாத பாலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் காய்ச்சாத பாலில் ஆன பொருட்களை மில்க் ஷேக், ஐஸ்கிரீம், போன்ற உணவுகளை தவிர்த்து, காய்ச்சிய பாலில் ஆன உணவுகளை சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக சில வீட்டு வைத்தியங்கள்👇👇👇

https://bit.ly/3CedShZ

3. முளைக்கட்டிய தானியங்கள்

கழுவப்படாத முளைக்கட்டிய பயிறு வகைகளில் பாக்டீரியாக்கள் இருக்கிறது. பச்சை காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகளை சாப்பிடும் போது நன்றாக கழுவி சமைத்து சாப்பிட வேண்டும்.

4. ஜங்க் ஃபுட்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. புரதச்சத்து, இரும்புச்சத்து, கோளின் போன்றவை முக்கியமான ஊட்டச்சத்தாகும். கருவில் குழந்தை இருக்கும் போது ஜங்க் ஃபுட் தவிர்ப்பதால், கருவில் வளரும் குழந்தைக்கு மிகவும் நல்லது.

 5. எள்

பெண்கள் குறிப்பாக முதல் 3 மாதங்களில் எள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. எள் சாப்பிடும் போது கருப்பை தசைகளை தூண்டி கருமுட்டை வெளியேறும்.

கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னுங்க 👇👇👇

https://bit.ly/35zJZN5

6. ஆல்கஹால்

குழந்தை கருவில் இருக்கும் போது ஒவ்வொரு சொட்டு ஆல்கஹால் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும்.

7. ஜூஸ்

கடைகளில் கிடைக்கும் ஜூஸ்கள் சுத்தமான முறையில் தயாரிக்க மாட்டார்கள். வீட்டிலே சுத்தமான முறையில் தயார் செய்து பருகலாம்.

8. பப்பாளி மற்றும் அன்னாசி பழம்

கர்ப்பமான காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். ஆனால் பப்பாளி பழம், திராட்சை, அன்னாசி பழம் இவற்றை தவிர்க்க வேண்டும்.

9. கத்திரிக்காய்

கத்திரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும். கத்திரிக்காயில் இருக்கும் சத்து மாதவிடாய் வரச் செய்திடும். அதனால் கர்ப்பத்தின் போது கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.

10. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கும். கர்ப்ப காலம் முழுவதும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியமானது.

Channel link

https://youtube.com/c/businessideasintamil

7 நாட்களில் 25000 லாபம் தினமும் 2 மணி நேரம் வேலை செய்தால் போதும் போட்டியே இல்லாத தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *