சுவையும் சத்துக்களும் நிறைந்த இஞ்சி பிரண்டை துவையல்!!!

சுவையும் சத்துக்களும் நிறைந்த இஞ்சி பிரண்டை துவையல்!!!

இஞ்சி பிரண்டை துவையல் ஜீரண சக்தி தரும். வாயுத்தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள் :

பிரண்டை துண்டுகள் : ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி : ஒரு சிறிய துண்டு

புளி : ஒரு நெல்லிக்காய் அளவு

உளுத்தம் பருப்பு : 4 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் : 3

கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் : 2 டீஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

செய்முறை :

பிரண்டையின் நாறை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

அதன்பின் புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும்.

ஒரு மிக்சியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான ஜீரண சக்தி தரும் இஞ்சி பிரண்டை துவையல் தயார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *