சுவையான நண்டு வருவலை இப்படி ஒரு முறை செய்து அசத்தி பாருங்க!!!

இன்றைய பதிவில் நாம் கறிவேப்பிலை நண்டு வறுவல் பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

கறிவேப்பிலை நண்டு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:-

நண்டு : 750 கிராம்

சின்ன வெங்காயம் : 100 கிராம்

தக்காளி : 2

இஞ்சி : 50 கிராம்

பூண்டு : 50 கிராம்

எலுமிச்சை : 1/2 ஸ்பூன்

மிளகு : 2 ஸ்பூன்

சோம்பு : 1 1/4 ஸ்பூன்

சீரகம் : 1/2 ஸ்பூன்

மஞசள் தூள் : 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை : 2 கொத்து

உப்பு : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :-

🦀 முதலில் ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கொஞ்சம் நிறம் மாறும் வரை அறுத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து மொறு மொறுனு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆறிய பிறகு மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

🦀 கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

🦀 வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து, சிறிது மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து வேகவைக்கவும்.

🦀 பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்றாக கிளறவும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு சேர்த்து சிறுது நேரம் வேகவைத்து இறக்கினால் சூப்பரான கறிவேப்பிலை நண்டு வறுவல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *