சுபகாரியத்தை தொடங்கும் போது விளக்கு ஏற்றுவதற்கு முன் இந்த விஷயத்தை தெரிந்து விளக்கு ஏற்றுங்கள்!!!

சுபகாரியத்தை தொடங்கும் போது விளக்கு ஏற்றுவதற்கு முன் இந்த விஷயத்தை தெரிந்து விளக்கு ஏற்றுங்கள்!!!

அனைவரும் எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போதும், முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது வழக்கம். வீட்டையும், பூஜை அறையும் எப்போதும் தூய்மையாக வைத்து இருந்தால் வீட்டில் எப்போதும் லட்சுமி குடியிருப்பாள்.

முதலில் வீட்டில் பூஜையை செய்வதற்கு முன் விளக்கை நன்றாக கழுவி, சுத்தம் செய்து, பூவும் பொட்டும் வைத்து மங்கள கரமாக வைத்து தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

விளக்கில் பல வகை உள்ளது. பஞ்சலோக விளக்கு, வெள்ளி விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு என்று பல வகை உள்ளது. வீட்டில் வெள்ளி விளக்கு தீபம் தான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை. சுத்தமாக, மன தூய்மையுடன் மண் அகல் விளக்கு ஏற்றி வைத்து இறைவனை வழிபட்டாலும் பல நன்மைகள் கிடைக்கும்.

வீட்டில் பொதுவாக அனைத்து நேரத்திலும் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது வழக்கம். காமாட்சி அம்மன் விளக்கை போல குத்து விளக்கும் புனிதமானது. இந்த விளக்கானது அனைத்து பூஜைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குத்து விளக்கிற்கு ஐந்து முகம் உண்டு. ஐந்து முக குத்து விளக்கு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது, அங்கு மங்கலம் பெருகும்.

குத்து விளக்கு முக நன்மைகள் :

குத்து விளக்கில் இருக்கும் ஒவ்வொரு முகத்திற்கும் பல நன்மைகள் இருக்கிறது.

👉 ஒரு முக விளக்கு ஏற்றினால் மத்திமம் உண்டாகும்.

👉 இரண்டு முக விளக்கு ஏற்றும் போது குடும்ப ஒற்றுமை பெருகும்.

👉 மூன்று முக விளக்கு ஏற்றும் போது புத்திர பாக்கியம் கிடைக்கும்.

👉 நான்கு முக விளக்கு ஏற்றினால் மாடு, மனை வளம் சேரும்.

👉 ஐந்து முக விளக்கு ஏற்றும் போது அனைத்து செல்வமும் செழிக்கும்.

திரி நன்மைகள் :

குத்து விளக்கில் இருக்கும் நன்மைகளை போல, விளக்கில் ஏற்றும் திரியிலும் பல நன்மைகள் இருக்கிறது.

பஞ்சினால் திரியிட்டு விளக்கு ஏற்றும் போது குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு பட்டையை திரித்து விளக்கு ஏற்றினால் செல்வங்கள் பெருகும்.

மஞ்சள் நிறத்தில் உள்ள திரியை ஏற்றினால் அம்பாளின் கருனை கிடைக்கும், மன தைரியமும் கூடும்.

சிவப்பு நிறத்தில் திரி ஏற்றும் போது திருமனம் சிறப்பாக நடக்கும்.

தாமரை தண்டின் நாரை திரித்து விளக்கு ஏற்றினால் தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *