சண்டே மறக்காம இந்த காரசாரமான இறால்  மசாலா செய்து பாருங்கள்!!!

சண்டே மறக்காம இந்த காரசாரமான இறால் மசாலா செய்து பாருங்கள்!!!

காரசாரமான இறால் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

இறால் – 250 கிராம்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டிஸ்பூன்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

பட்டை – 1 துண்டு

சோம்பு – 1 டீஸ்பூன்

ஏலக்காய் – 2

வெங்காயம் – 1

தக்காளி – 2

உப்பு – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

தண்ணீர் – 1/2 கப்

செய்முறை :

முதலில் இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து இறாயுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 5 நிமிடம் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து பொறிந்ததும் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கிய பிறகு அனைத்து மசாலாவையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.

தண்ணீர் சேர்த்து கொதித்த பிறகு கடைசியாக இறால் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் காரசாரமான இறால் மசாலா தயார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *