கொஞ்சம் ரிலாக்ஸ் பாஸ்!!!

விடுகதை :

1. ஒரு கண் மட்டுமே உண்டு. ஆனாலும் அதனால் பார்க்க முடியாது? அது என்ன?

2. இந்த நீரை குடிக்கவும் முடியாது, கையால் அள்ளவும் முடியாது, பாத்திரத்தில் பிடிக்கவும் முடியாது? ஆனால் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். அது என்ன?

3. இதனை தேவைப்படும் போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாக எடுத்து வைப்பார்கள்.

4. ஒரு குடம் முழுவதும் தண்ணீர் உள்ளது. அந்த குடத்தை தூக்குவதற்கும் கடினமாக உள்ளது அந்த குடத்தில் எதை போட்டால் தூக்குவதற்கு எளிமையாக இருக்கும்?

5. மூக்கைத் தட்டி வாயில் போட்டேன். அது என்ன?

6. ஒட்டுவது ஒருவன், பிரிப்பது ஒருவன், அவன் யார்?

7. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, ஆனால் காசு வாங்காமல் போனாரு. அவன் யார்?

8. யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

9. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?

10. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் வளர்வாள். பாதிநாள் குறைவாள். அவள் யார்?

விடைகள் :-

1. ஊசி

2. கானல் நீர்

3. நங்கூரம்

4. ஓட்டை போட்டால் தூக்குவதற்கு எளிமையாக இருக்கும்.

5. வேர்க்கடலை

6. தபால்

7. கொசு

8. கண் இமை

9. வானம்

10. நிலா

இது சிரிக்கும் நேரம்😁😁😁

கடி 1:

😆கரும்புக்கும் எறும்புக்கும் என்ன வித்தியாசம்?

…🤔

…🤔

…🤔

…🤔

கரும்ப நாம கடிக்கிறோம்…

எறும்பு நம்பள கடிக்கிது.

😁😁😁

கடி 2:

டாக்டர் : வாயில் என்ன தம்பி கட்டு ?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க டாக்டர், எனக்கு கொழுப்பு அதிகமாயிடிச்சு வாயை கட்டணும்னு….

டாக்டர் :

🤐🤐🤐

கடி 3:

ரங்கசாமி : என் மனைவிக்கு என் மேல கொள்ள பிரியம்…

ராமசாமி : அப்படியா !!! என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்…

ரங்கசாமி : 🙄🙄🙄

கடி 4:

மனைவி : ஏங்க நான் வரும் போது மட்டும் கண்ணாடி போடுறீங்க ???

கணவன் : டாக்டர் தான் தலைவலி வரும் போது மட்டும் கண்ணாடி போட்டுக்க சொன்னாரு…!

மனைவி : 😡😡😡

கடி 5:

ராதா : இந்த கல்யாணத்துல மட்டும் ரொம்ப ‘ஈ’ மொய்க்குது ஏன்?

தாரா : இந்த கல்யானம் ஜாம் ஜாம்னு நடக்குது அதான் ‘ஈ’ அதிகமாக மொய்க்குது.

ராதா : 🙄🙄🙄

கடி 6:

சஞ்சனா: தாகம் ஏற்பட்டால், வாய் ஒட்டுவது ஏன் ???

காஞ்சனா :🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

சஞ்சனா : தாகம் அதில் கம் இருக்கிறது அதனால்தான்.

காஞ்சனா : 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *