கொஞ்சம் கூட மசாலா உதிராமல் மொறு மொறு மீன் வறுவல் இப்படி செய்து அசத்துங்க..!

கொஞ்சம் கூட மசாலா உதிராமல் மொறு மொறு மீன் வறுவல் இப்படி செய்து அசத்துங்க..!

வணக்கம் நண்பர்களே..!

இன்றைய பதிவில் நாம் மிகவும் சுலபமாக, கொஞ்சம் கூட மசாலா உதிராமல் மொறு மொறுனு மீன் வறுவலை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் மீன் வறுவலுக்கு தேவையான மசாலா எவ்வாறு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு பற்கள் – ஒரு கைப்படி அளவு

சோம்பு – 1 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

சோள மாவு – 1/2 டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

😋 முதலில் மிக்ஸி கிண்ணத்தில் இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

😋 பிறகு அதனுடன் மல்லித்தூள், மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, அரைக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

😋 அதன் பின் சோள மாவு, அரிசி மாவையும், தண்ணீர், எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

😋 அரைத்த மசாலாவை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றி மீன் எடுத்து மீனில் அரைத்த மசாலா சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

😋 பிறகு கடாயில் மீன் வறுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மீன் வறுக்கலாம்.

😋 இவ்வாறு மீன் வறுக்கும் போது மசாலா உதிராமல், சூப்பராக சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *