குறைந்த முதலீட்டில் 100% லாபம் தரக்கூடிய தொழில்… வீட்டில் இருந்தே செய்யலாம்..!

குறைந்த முதலீட்டில் 100% லாபம் தரக்கூடிய தொழில்… வீட்டில் இருந்தே செய்யலாம்..!

தமிழ் பேசும் நண்பர்களுக்கு வணக்கம்..!

இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கக்கூடிய ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு தேவையான நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு. அனைவரும் வீட்டில் இருந்தே எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலை பற்றி பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் அதிக லாபம் தரக்கூடிய கப் சாம்பிராணி தயாரிப்பு தொழிலைப் பற்றி பார்க்கலாம். இந்த கப் சாம்பிராணி பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஆனால் அவை எல்லாம் வெளி மாநிலத்தில் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. ஆனால் கருப்பு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது. நாம் பல வண்ணங்களில் இங்கு தயார் செய்து விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம். இந்த தொழிலுக்கு என்ன என்ன மூலப்பொருட்கள் தேவை, இயந்திரம் என்ன வேண்டும் என்று முழு விவரம் பார்க்கலாம்.

இயந்திரம் :

கப் சாம்பிராணி தயார் செய்ய இயந்திரம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்திரன் ஆரம்ப விலை 20 ஆயிரத்தில் இருந்து கிடைக்கிறது.

மூலப்பொருட்கள் :

கப் சாம்பிராணி தயார் செய்ய சாம்பிராணி, கரித்துகள்கள், மரத்தூள்கள், ஜிகட், வாசனை திரவியங்கள், yy கெமிக்கல் இந்த மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.

தயாரிக்கும் முறை :

முதலில் மூலப்பொருட்கள் அனைத்தும் நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு மூலப்பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்து கலக்கி இயந்திரத்தின் கீழ் இருக்கும் தட்டில் வைத்து இயந்திரத்தை அழுத்தி எடுத்தால் கப் சாம்பிராணி தயார்.

தயாரிக்கும் போது அதிக வண்ணங்களில் கப் சாம்பிராணி தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இடவசதி :

இந்த தொழாலை ஆரம்பிக்க இயந்திரத்தை வைத்து இயக்க டேபிள் அளவு இடம் இருந்தால் போதும்.

வருமானம் :

ஒரு பாக்ஸ் சாம்பிராணியில் 12 கப் சாம்பிராணி பேக் செய்யலாம். 1 பாக்ஸ் சாம்பிராணிக்கு சராசரியாக 10 ரூ லாபம் கிடைக்கும். தினமும் 100 பாக்ஸ் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1000 ரூ லாபம் கிடைக்கும்.

விற்பனை :

தயார் செய்த சாம்பிராணியை பூஜை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் இடங்களில், மளிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *