குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே நீங்களும் இந்த தொழிலை செய்யலாம்…!

குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே நீங்களும் இந்த தொழிலை செய்யலாம்…!

இந்த பதிவில் நாம் வீட்டில் இருந்தே நல்ல லாபம் தரக்கூடிய தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலில் நாம் எந்த பொருளையும் தயார் செய்ய போவதில்லை, பொருளை மொத்தமாக வாங்கி ரீபேக்கிங் செய்தால் போதும். ரீபேக்கிங் செய்து விற்பனை செய்யும் போது முதலீடு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் கிடைக்கிறது.

ரீபேக்கிங் தொழிலை தொடங்க நினைத்தால் இந்த தொழில் அருமையான தொழில் இப்போ இந்த பதிவில் இந்த தொழிலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

தொழில் :

இந்த பதிவில் நாம் கருப்பு கவுனி அரிசி தொழிலை பற்றி பார்க்கலாம். கருப்பு கவுனி அரிசியில் பல நன்மைகள் உள்ளது. கருப்பு கவுனி அரிசியை மொத்தமாக வாங்கி பேக் செய்து விற்பனை செய்யும் போது நல்ல வருமானம் எடுக்கலாம்.

இடம் :

இந்த தொழிலில் நாம் ரீபேக்கிங் மட்டும் தான் செய்ய போறோம். இதற்காக இடம் தனியாக எதுவும் வேண்டாம். வீட்டில் இருந்தே செய்யலாம்.

மூலப்பொருட்கள் :

இந்த தொழிலை ஆரம்பிக்க முக்கிய மூலப்பொருள் கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசி மொத்தமாக 50 கிலோ, 100 கிலோ அளவுகளில் வாங்கலாம். மொத்தமாக வாங்கினால் மட்டுமே விலை குறைவாக இருக்கும்.

மொத்தமாக வாங்கிய அரிசியை 1 கிலோ, 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ இந்த அளவுகளில் பேக் செய்யலாம்.

அரிசி பேக் செய்ய பேக்கிங் பேங் தேவைப்படுகிறது.

இயந்திரம் :

இந்த தொழிலை ஆரம்பிக்க 2 இயந்திரம் தேவைப்படுகிறது.

Weighing Scale

Sealing Machine

இந்த இரண்டு இயந்திரம் தேவைப்படுகிறது.

முதலீடு :

மூலப்பொருட்கள் வாங்க, இயந்திரம் வாங்க ஆரம்பத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.

வருமானம் :

ஒரு கிலோ கவுனி அரிசி கடைகளில் 350 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். ஒரு கிலோ மொத்தமாக வாங்கும் போது ஒரு கிலோ அரிசி 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரு கிலோ அரிசியை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது 1 கிலோவிற்கு 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது. 100 கிலோ விற்பனை செய்யும் போது 10,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *