ஒவ்வொரு நாளும் மதியம் மதியம் 1 மணிக்கே லாபம் எடுக்கும் தொழில்!!!

ஒவ்வொரு நாளும் மதியம் மதியம் 1 மணிக்கே லாபம் எடுக்கும் தொழில்!!!

இன்றைய பதிவில் நாம் ஒரு புதுமையான தொழில் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை ஆரம்பிக்க குறைந்த முதலீடு போதும். கடை வேண்டாம் வீட்டில் இருந்தே செய்யலாம். மார்க்கெட்டில் இந்த பொருளுக்கு அதிக அளவில் தேவை உள்ளது. இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

தொழில் :

இன்றைய பதிவில் நாம் பீட்ரூட் பவுடர் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். பீட்ரூட் பவுடரில் அதிக அளவு சக்தி இருப்பதால் நிறைய மக்கள் இந்த பவுடர் வாங்கி உணவில் சேர்த்து கொள்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அழகு நிலையம், அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்க, ஹேர் கலர் இப்படி பல விதமாக பீட்ரூட் பவுடர் பயன்படுகிறது.

பீட்ரூட் பவுடர் தயாரிக்கும் முறை :

பீட்ரூட் பவுடர் தயாரிக்க முக்கியமாக பீட்ரூட் தேவைப்படுகின்றது.

பீட்ரூட்

மிக்ஸி

சீலிங் மெஷின்

பேக்கிங் கவர் இந்த பொருட்கள் எல்லாம் தேவைப்படுகின்றது. இந்த தொழிலை செய்வதற்கு ஒருத்தர் மட்டும் போதும்.

இந்த தொழிலை இரண்டு விதமான செய்யலாம். பீட்ரூட் பவுடரை நீங்களே வீட்டிலே தயார் செய்யலாம். இல்லையென்றால் மொத்தமாக வாங்கி உங்க கம்பெனி ஸ்டிக்கர் ஒட்டி பேக் செய்து விற்பனை செய்யலாம்.

பீட்ரூட் பவுடர் தயாரிக்கும் முறை :

பீட்ரூட் மொத்தமாக வாங்கி நன்றாக கழுவி பீட்ரூட் மேல் இருக்கும் தோல் எடுத்து, பீட்ரூட்டை சிறிய சிறிய துண்டுகளாக கட் பன்னி வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்தவுடன் மிக்ஸியில் அரைத்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

முதலீடு :

பீட்ரூட் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு விலை இருக்கும். பீட்ரூட் விலை ஏறி இறங்கும். பேக்கிங் கவர், மிக்ஸி, மூலப்பொருள் எல்லாம் சேர்த்து ஆரம்பத்தில் 9 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்.

வருமானம் :

1 கிலோ தயார் செய்ய 100ரூ செலவு ஆகிறது. மார்க்கெட்டில் 1 கிலோ 400ரூ, 500ரூ, 600ரூ வரை விற்பனை செய்கிறார்கள். நீங்கள் 400 ரூ விற்பனை செய்தாலும் 300ரூ லாபம் கிடைக்கிறது. 1 நாளைக்கி 10 கிலோ விற்பனை செய்தாலும் 3000ரூ லாபம் கிடைக்கிறது.

விற்பனை இடம் :

தயாரித்த பீட்ரூட் பவுடரை சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, ஆன்லைன் ஸ்டோர்களில், அழகு நிலையம், அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *