
எல்லாருக்கும் வீட்டில் பூச்செடி வளர்க்க ஆசை உண்டு. அதுவும் அந்த பூச்செடிகள் அதிக பூ பூக்க நிறைய ஆசைப்படுவோம். இப்போ நாம் வீட்டில் வேண்டாம் என்று தூக்கிப்போடும் பொருட்களை வைத்து செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உருவாக்க கூடிய உரம் எப்படி எளிய முறையில் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
உரம் தயாரிக்க வீட்டில் நாம் தூக்கி போடும் பொருட்களை பயண்படுத்தினால் போதும். முட்டை ஓடு வெயிலில் காய வைக்க வேண்டும்( முட்டை சாப்பிடாதவர்கள் முட்டை ஓடு க்கு பதிலாக வெங்காய தோல் எடுத்துக்கலாம்), அடுத்ததாக நீங்கள் வீட்டில் எந்த பழங்கள் வாங்கி வந்ததாலும் சரி அந்த பழத்தின் தோல் சிறிய துண்டுகளாக கட் பன்னி நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும், எலுமிச்சை தோலில் வைட்டமின் சி உள்ளது, அது மட்டும் இல்லாமல் வேர்களை தாக்கக்கூடிய பூச்சிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. அதனால் எந்த பழத்தின் தோலாகா இருந்தாலும் சரி நாம் காய வைத்து எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமாக வாழைப்பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் பயன்படுத்தும் போது செடியில் நிறைய பூக்கள் பூக்கிறது. பூக்களின் மொட்டுக்கள் பெரிதாக கிடைக்கிறது. இதனுடன் தேவைப்பட்டால் கருவேப்பிலை, வேப்பிலை இலைகளும் காய வைத்து பயன்படுத்தலாம்.
நன்றாக காய்ந்த பிறகு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கலாம். அரைத்து வைத்த உரத்தை 4 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். பயன்படுத்தும் போது செடியின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு ஸ்பூன், அல்லது இரண்டு ஸ்பூன் உரமாக பயன்படுத்தலாம்.
இதனுடன் புளிச்ச இட்லி மாவு அல்லது தயிர் எடுத்து கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். இவ்வாறு செய்யும் போது நன்றாக பூ பூக்கும்…