உங்கள் வீட்டை சுற்றி 10 கடை இருந்தால் போதும் வாரம் 30,000 லாபம் எடுக்கலாம்!!!

உங்கள் வீட்டை சுற்றி 10 கடை இருந்தால் போதும் வாரம் 30,000 லாபம் எடுக்கலாம்!!!

இன்றைய பதிவில் நாம் சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த பொருள் தினம் தினம் அதிக அளவில் தேவைப்படக்கூடிய பொருள். இந்த பொருளை மொத்தமாக வாங்கி சுத்தம் செய்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

இன்றைய பதிவில் நாம் நிலக்கடலை தொழாலை பற்றி பார்க்கலாம். நிலக்கடலை மொத்தமாக வாங்கி நிலக்கடலை மேல் இருக்கும் தோல் எடுத்து சுத்தம் செய்து பேக் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

நிலக்கடலை வைத்து நிறைய உணவுப்பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள், நிலக்கடலை எண்ணெய் என்று நிறைய பொருடகளை தயார் செய்கிறார்கள்.

லைசன்ஸ் :

இந்த தொழிலை தொடங்க fsssai, GST தேவைப்படுகிறது.

நிலக்கடலை மொத்தமா கிடைக்கும் இடம் :

தமிழ்நாட்டில் அதிக இடங்களில் நிலக்கடலை விளைகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம் இந்த இடங்களில் நிலக்கடலை அதிக அளவில் விளைகிறது. மற்ற இடங்களை விட இந்த இடங்களில் குறைவான விலைக்கு கிடைக்கிறது.

மொத்தமாக வாங்கும் போது 1 கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இயந்திரம் :

இந்த தொழிலை ஆரம்பிக்க நிலக்கடலை தோல் நீக்கும் இயந்திரம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை 25 ஆயிரம் ஆகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் முழுசா இருக்கும் நிலக்கடலை தோல் எடுக்க பயன்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் 1 மணி நேரத்திற்கு 25 கிலோ சுத்தம் செய்கிறது. இதுவே ஒரு மணி நேரத்திற்கு 500 கிலோ தோல் எடுக்கும் இயந்திரமும் உள்ளது. இயந்திரத்தின் விலையின் அடிப்படையில் தயாரிக்கும் அளவு மாறுபடும்.

கட்டிட அமைப்பு :

இந்த இயந்திரத்தை வைத்து தொழில் ஆர்மபிக்க 100sft இடம் இருந்தால் போதும்.

பேக்கிங் :

தயாராகி வரும் நிலக்கடலையை 50 கிலோ, 25 கிலோ, 1 கிலோ, 500 கிராம் இந்த அளவுகளில் பேக்கிங் செய்யலாம். மொத்தமாக விற்பனை செய்கிறீர்கள் என்றால் 25 கிலோ அளவில் பேக் செய்யலாம். மளிகை கடைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1 கிலோ, 500 கிராம் அளவுகளில் பேக் செய்யலாம். பேக் செய்து உங்க கம்பெனி பெயர் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யலாம்.

வருமானம் :

1 கிலோ நிலக்கடலை சுத்தம் செய்து விற்பனை செய்வதன் மூலம் 25 ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 200 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 5000 ரூ வருமானம் கிடைக்கிறது.

விற்பனை :

நீங்கள் தயார் செய்த பொருளை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், சிறிய சிறிய கடைகளில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *