உங்கள் உடலை பற்றி நீங்கள் அறிந்திடாத ஆச்சரியமான 50 தகவல்கள்!!!

உங்கள் உடலை பற்றி நீங்கள் அறிந்திடாத ஆச்சரியமான 50 தகவல்கள்!!!

இன்றைய பதிவில் நாம் நமது உடலை பற்றி பல்வேறு ஆச்சரியமான தகவல்களை பற்றி பார்க்கலாம்.

👉 குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

👉 நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

👉 ஒரு மனிதனின் உடலில் கடைசி வரை வளர்ந்து கொண்டே இருக்கும் பாகம் மூக்கு, காது தான்.

👉 மகிழ்ச்சியாக இருக்கும் போது உங்களால் அதிக வேலையை செய்ய முடியும்.

👉 மனித உடலில் இருக்கும் இரத்த நாளங்களை இணைத்தால் அது ஒரு லட்சம் மைல் தூரம் இருக்கம்.

👉 மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

👉 மனிதனின் கண்கள் 10 மில்லியன் வண்ணங்களை பிரித்து காட்டும் திறன் கொண்டது.

👉 வலி இருக்கும் போது நாம் சிரித்தால் வலியை குறைக்க சிரிப்பு உதவுகிறது.

👉 முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

👉 ஒரு முத்தத்தின் மூலம் ஒரு ஜோடி சுமார் ஒரு பில்லியன் பாக்டீரியாக்களை பரிமாற்றிக் கொள்கிறார்கள்.

👉 ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 23.65 லிட்டர் எச்சிலை சுரக்கிறான். இது ஒரு நீச்சல் குளத்தை நிரப்புவதற்கு போதுமான நீர் அளவு.

👉 ஒரு வேளை மனித கண்கள் டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் திறன் 576 மெகா பிக்சல் திறன் கொண்டது.

👉 நாக்கில் 8 வெவ்வேறு தசைகள் உள்ளது.

👉 வயது அதிகமாக அதிகமாக காயங்கள் ஆற அதிக நேரம் ஆகும்.

👉 நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

👉 நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.

👉 குழந்தைகளின் உடலில் பெரியவர்களை விட அதிக தண்ணீர் உள்ளது.

👉 நாம் சாப்பிடும் போது நமது வாயிலிருந்து வயிற்றுக்குள் உணவு செல்ல 7 வினாடிகள் ஆகிறது.

👉 கீழ் கண்ணிமையின் முடிகளை விட மேல் கண்ணிமையின் முடிகள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

👉 பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வேகமாக வளரும்.

👉 நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

👉 நாக்கில் சுமார் 4000 சுவை மொட்டுகள் உள்ளது.

👉 பற்கள் சுறா பற்களைப் போல கடினமானவை.

👉 உடல் வெப்பத்தின் ஐந்தில் ஒரு பகுதியை கல்லீரல் வழங்குகிறது.

👉 சிலர் குள்ளமாக இருக்க காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

👉 தும்மல் தற்காலிகமாக இதயத் துடிப்பை மாற்றுகிறது.

👉 நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம் எடை இருக்கும்.

👉 உடலில் மிக மெல்லிய தோல் கண் இமைகளில் உள்ளது.

👉 இரத்தம் அமேசான் ஆற்றின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளத்தை ஒரே நாளில் பயணிக்கிறது.

👉 கல்லீரல் 500 க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியது.

👉 ஈரப்பதமான காலநிலையில் உங்கள் வாசனை உணர்வு நன்றாக இருக்கும்.

👉 தோலின் மேற்பரப்பு இறந்த செல்களால் ஆனது.

👉 பசியுடன் இருக்கும் போது நாம் அதிக பணம் செலவிடுகிறோம்.

👉 ஐந்து பேரில் ஒருவரால் மட்டுமே காதுகளை அசைக்க முடியும்.

👉 நமது உடல் தினமும் நான்கு சோடா கேன்களை நிரப்ப போதுமான சளியை உருவாக்குகிறது.

👉 வயதாகும் போது உங்கள் நுறையீரல் நிறம் மாறும்.

👉 உடலில் மிகச் சிறிய அளவிலான தசை அரிசியை விட சிறியது.

👉 கால் நகங்களை விட விரல் நகங்கள் வேகமாக வளரும்.

👉 நாம் ஒரு ரோலர் கோஸ்டரில் வேகமாக செல்லும் போது வயிறு மற்றும் குடல்கள் அதன் இடத்தை விட்டு சிறுது நகர்கிறது.

👉 மூளையில் குறைந்து ஆயிரத்திற்கும் மேல் நரம்பியல் இனைப்புகள் உள்ளன.

👉 காதுகளின் பெரும் பகுதி தலைக்குள் உள்ளது.

👉 பற்கள் கை ரேகைகளைப் போல தனித்துவமானது.

👉 நான்கு கப் அளவு செரிமானம் ஆன உணவை வயிற்றால் உள்ளே வைக்க முடியும்.

👉 பெரிய குடல் சிறுகுடலை விட நான்கு மடங்கு சிறியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *