இனி நீங்களும் ஈசியா தொழில் செய்து வாரம் 15,000 வரை லாபம் எடுக்கலாம்!!!

இனி நீங்களும் ஈசியா தொழில் செய்து வாரம் 15,000 வரை லாபம் எடுக்கலாம்!!!

இன்றைய பதிவில் நாம் 500 ரூ முதலீட்டில் ஆரம்பிக்க கூடிய ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு நீங்கள் எப்போ சும்மா இருக்கீங்களோ அந்த நேரத்தில் இந்த தொழிலை செய்யலாம்.

இன்றைய பதிவில் நாம் ஹெர்பல் ஷாம்பு தொழிலை பற்றி பார்க்கலாம். ஷாம்பு வில் நிறைய வகை உள்ளது. நாம் எந்த விதமான கெமிக்கலும் கலக்காமல் சுத்தமான ஹெர்பல் ஷாம்பு தயார் செய்து விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம்.

முலப்பொருட்கள் :-

ஹெர்பல் ஷாம்பு தயார் செய்ய நெல்லிக்காய், ஆவாரம்பூ, செம்பருத்தி, எலுமிச்சை, பூவங்கொட்டை, சீயக்காய் இந்த மூலப்பொருட்கள் வைத்து நாம் ஷாம்பு தயார் செய்யலாம். இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

இந்த மூலப்பொருட்களை கொண்டு நாம் ஷாம்பு தயார் செய்து விற்பனை செய்யும் போது அதிக ஷாம்பு விற்பனை செய்யலாம்.

அளவு :-

2 லிட்டர் ஷாம்பு தயாரிக்க எத்தனை அளவு எடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

RO Water = 2 லிட்டர்

பூவங்கொட்டை = 100 கிராம்

சீயக்காய் = 100 கிராம்

நெல்லிக்காய் = 10

ஆவாரம்பூ = 50 கிராம்

செம்பருத்தி = 100 கிராம்

எலுமிச்சை = 2

இந்த அளவுகளில் மூலப்பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூலப்பொருட்களை கொண்டு ஷாம்பு தயாரிக்கும் போது சூப்பரான குவாலிட்டி யா இருக்கும்.

ஷாம்பு தயாரிக்கும் முறை :-

ஷாம்பு தயாரிக்க மிஷின் எதுவும் தேவையில்லை, சூடு பன்னவும் தேவையில்லை. வீட்டிலேயே ஈசியான முறையில் தயார் செய்யலாம்.

முதலில் RO Water எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்ச பழம், நெல்லிக்காய் இவற்றை மட்டும் இரண்டாக வெட்டிக் கொண்டு நீரில் சேர்க்க வேண்டும். மீதம் உள்ள மூலப்பொருட்களை மேலே கூறியுள்ள சரியான அளவில் எடுத்து தண்ணீரில் சேர்கக வேண்டும். பிறகு நன்றாக கலக்கி ஒரு நாள் முழுவதும் மூலப்பொருட்களை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் ன காலையில் ஒரு சுத்தமான வெள்ளை துணியால் வடிகட்டி, ஷாம்பு டப்பாவில் நிரப்பி உங்க கம்பெனி விவரம் அடங்கிய ஸ்டிக்கர் ஷாம்பு டப்பாவில் ஒட்டி விற்பனை செய்யலாம்.

முதலீடு :-

ஆரம்பத்தில் இந்த தொழிலுக்கு 500 ரூ முதலீடு செய்தாலே போதும்.

லாபம் :-

ஒரு லிட்டர் ஷாம்பு தயாரிக்க 100 ரூ செலவு ஆகிறது. மார்க்கெட்டில் ஒரு லிட்டர் ஷாம்பு 800 ரூ முதல் 1000 ரூ வரை விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு லிட்டர் ஷாம்பு 500 ரூ விற்பனை செய்தாலும் 400 ரூ லாபம் கிடைக்கிறது ஒரு லிட்டர் ஷாம்பு விற்பனை செய்யும் போது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *