இனி சட்னி அரைக்கும் போது இந்த டிப்ஸ் மட்டும் டிரை பன்னுங்க போதும்!!!

இனி சட்னி அரைக்கும் போது இந்த டிப்ஸ் மட்டும் டிரை பன்னுங்க போதும்!!!

குறிப்பு 1 :

தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை வேற மாதிரி சுவையாக இருக்கும்.

குறிப்பு 2 :

வெங்காயம், தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது வறுத்த கருப்பு எள்ளை பொடி செய்து சேர்த்தால் மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்.

குறிப்பு 3 :

இஞ்சி, பூண்டு சட்னி தயார் செய்கிறீர்கள் என்றால் 3 பங்கு பூண்டுக்கு 2 பங்கு இஞ்சி சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக சேர்க்கும் போது சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு 4 :

உங்கள் வீட்டில் தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், நாவில் எச்சில் ஊறும் சுவையில் பச்சடி தயார்.

குறிப்பு 5 :

கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

குறிப்பு 6 :

துவையல் அரைக்கும் போது, துவையலில் மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக மிளகு சேர்த்து அரைக்கும் போது துவையல் ருசியாகவும், நல்ல மணமாகவும் இருக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *