இந்த செடியை வீட்டில் வளர்த்தால் வீட்டில் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது. மரம் வளர்க்க இடம் இல்லாதவர்கள் செடி வளர்க்கலாம்.

அதற்காக கிடைத்த செடிகளை எங்கு வேண்டுமானாலும் நடுதல் கூடாது.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil

செடிகளை எங்கு வளர்க்கலாம் ?

🪴வீட்டில் துளசி செடியை வளர்ப்பது நல்லது. துளசி செடியில் தெய்வீக குணங்களும், நல்ல அதிர்வலைகளையும் உண்டாக்குவதால் துளசி செடியை வளர்க்கலாம்.

🌸அரளி பூவை வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும், சுத்தமான காற்றை அளிக்கவும், பூஜைக்கும் பயன்படுத்துகிறார்கள். அரளி செடியானது அசுத்தமான காற்றை உள்வாங்கி சுத்தமான காற்றை வெளியிடுகிறது. ஆனால் அரளி செடியை வீட்டில் வளர்ப்பது நல்லதல்ல. அவ்வாறு வளர்த்தால் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் பிரச்சனை ஏற்படலாம்.

பெரும்பாலும் இச்செடியை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புவதில்லை. கோவில்களில் மட்டுமே வளர்க்கின்றனர்.

பொன் மஞ்சள் செடியை வீட்டில் வளர்ப்பதால் சுத்தமான காற்றோட்டம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் மஞ்சள் நிறம் மங்களத்தின் அடையாளம். அது மட்டும் இல்லாமல் அதிக அளவில் செல்வத்தை வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனால் இந்த மஞ்சள் அரளி செடியை வளர்க்கலாம்.

செடியை வளர்க்க போதுமான இட வசதி இல்லாதவர்கள், சிறிய தொட்டியிலும் வளர்க்கலாம்.

மருதாணி செடியை மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

வீட்டின் அருகில் முள் செடிகளை வளர்க்க கூடாது. ஆனால் ரோஜா செடியிலும் முட்கள் இருக்கும். ரோஜா செடியை தவிர மற்ற முள் செடியில் எதிர்மறை ஆற்றல் இருப்பதால் தீங்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *