நாம் கானும் எல்லா கனவுகளுக்கு பலன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், ஆழ்ந்து உறக்கத்தில் வரும் கனவுகளுக்கு பலன் இருக்கும். ஆனால் இந்த ஒரு கனவு உங்களுக்கு வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் இதை யாராலும் தடுக்க முடியாது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கனவு வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும். சூரிய உதயத்திற்கு பிறகு கனவு வந்தால் பெரிய பலன் இருக்காது.
கோவில் கலசம்:

கோவில் கோபுரத்தில் இருக்கும் கலசம் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உடனடியாக ஏற்படப்போகிறது.
யானை :

யானை உங்களுக்கு ஆசிர்வாதம் செய்தாலோ அல்லது மாலை அணிவது போல் கனவு கண்டாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரைவில் அடுத்த நிலைக்கு முன்னேறுவீர்கள்.
மயில் :

உங்கள் கனவில் மயிலிறகு அல்லது மயில் கனவில் வந்தால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். குறிப்பாக வெள்ளை மயில் கனவில் வந்தால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிதான்.
நெருப்பு :

நெருப்பு எறிவது போல் கனவு வந்தால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படப்போகிறது.
குதிரை :

வெள்ளை நிறத்தில் இருக்கும் குதிரை ஓடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும்.
பசுமாடு :

வெள்ளை நிறத்தில் உள்ள பசுமாடு கனவில் வந்தால் நீங்கள் நினைத்த அனைத்து விஷயங்களும் உடனடியாக நடக்கும். நீங்கள் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
மஞ்சள் :

மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து பெண் கனவில் வந்தால் மகாலட்சுமி ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். செல்வ செழிப்போடு நீங்கள் வாழ்வீர்கள்.