இதுவரை நீங்கள் கேள்விப்படாத தொழில். 500ரூ முதலீட்டில் 3000ரூ லாபம்

இதுவரை நீங்கள் கேள்விப்படாத தொழில். 500ரூ முதலீட்டில் 3000ரூ லாபம்

வணக்கம் நண்பர்களே..!

அனைவருக்கும் தொழில் ஆரம்பித்து அந்த தொழிலில் அதிக லாபம் எடுக்க வேண்டும் என்று அசைப்படுவார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த தொழிலுக்கு போட்டியும் அதிகம் இல்லாமல் இருந்தால் தான் தொழிலில் வெற்றி பெற முடியும்.

இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் தொழிலுக்கு போட்டியே இல்லை. அதுமட்டும் இல்லாமல் 500ரூ முதலீடு இருந்தாலே போதும். பொருளை தயார் செய்வதும் மிக மிக சுலபம். வீட்டில் இருந்தே யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை தொடங்கலாம்.

தொழில் :

இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் தொழில் பஜ்ஜி மாவு தயார் செய்யும் தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த பொருளை வீட்டிலே மிகவும் சுலபமாக தயார் செய்யலாம்.

முதலீடு :

இந்த தொழிலை ஆரம்பிக்க ஆரம்பத்தில் 500ரூபாய் முதலீடு இருந்தால் போதும்.

தேவையான மூலப்பொருள் :

பஜ்ஜி மாவு தயார் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக தயார் செய்யலாம்.

கடலை மாவு = 2 கிலோ

அரிசி மாவு = 400கிராம்

மிளகாய் தூள் = 40கிராம்

பெருங்காயத்தூள் = 10 கிராம்

சோடா மாவு = 12 கிராம்

உப்பு = 40 கிராம்

இந்த அளவில் மூலப்பொருட்கள் சேர்க்கும் போது 2 கிலோ மாவு கிடைக்கிறது.

தயார் செய்யும் முறை :

மூலப்பொருட்கள் எல்லாம் சரியான அளவுகளில் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கி பேக் செய்து விற்பனை செய்யலாம்.

வருமானம் :

இந்த தொழிலை செய்வதன் மூலம் தினமும் 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

விற்பனை செய்யும் இடம் :

தயார் செய்த பஜ்ஜி பவுடரை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஆன்லைன் ஸ்டோர்களில், விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *