அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்!!!

அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்!!!

கனவு இரவிலும் தோன்றும், பகலிலும் தோன்றும். பகலில் காணும் கனவுகள் பலிப்பதில்லை. அதே நேரத்தில் விடியற்காலை 3.30 மணி முதல் 6.00 மணி வரை கானும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் நன்றாக உறங்கி கொண்டு இருக்கும் போது கனவுகள் தோன்றுகிறது. சிலர் தினசரி கனவு காண்கின்றனர். கனவுகள் சிலருக்கு சந்தோஷமாக, சிலரு‌க்கு வருத்தமாக, பயமாக, வியப்பாக வருகிறது. கனவில் ஒரு சில கனவுகள் பின்னாடி பல அர்த்தங்கள் இருக்கிறது. அந்த கனவுகள் நம்மை எச்சரிக்கும், இந்த கனவுகள் வருகிறது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த வகையில் எச்சரிக்கக்கூடிய கனவுகளை பற்றி பார்க்கலாம்.

கனவில் வருபவர்கள் நாம் சந்தித்த நம்முடைய நிஜ வாழ்க்கையில் பார்த்தவர்கள் தான் கனவில் வருவார்கள்.

எல்லாம் சரி பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா என்று கேட்டால் நிச்சயம் வரும். அவர்கள் எப்படி பார்ப்பார்கள், அவர்கள் கனவில் யார் வருவார்கள் என்று கேள்வி வரும், அவர்கள் கேட்ட சத்தம், குரல் இதற்கு அவர்கள் ஒரு உருவம் கற்பனை செய்து வைத்து இருப்பார்கள் அவர்கள் தான் கனவில் வருவார்கள்.

இப்போது ஆச்சரியமான கனவுகளை பற்றி பார்க்கலாம்:-

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் :-

நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால், உங்களுக்கு பெயரும், புகழும் மிக சிறப்பாக உண்டாகும் என்று அர்த்தம்.

அழுவது போல கனவு:-

ஒருவர் வாய்விட்டு பலமாக அழுவது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.

மேலே இருந்து குதிப்பது போல் கனவு வருவது :-

நாம் பதட்டமாக இருக்கும் போது, வேலை சுமை அதிகமாக இருக்கும் போது இந்த மாதிரியான கனவுகள் வரும். அந்த நேரத்தில் நாம் எந்த வேலை செய்தாலும் நிதானமாக செய்ய வேண்டும்.

பிறரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் :-

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புகழும் பன்மடங்கு பெருகும்.

திருமணம் நடைபெறும்:-

நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் பங்கேற்பது போல் கனவு வந்தால் திருமணம் ஆகாதவர்கள் இந்த கனவை கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும், பணியில் பதவி உயர்வு ஏற்படும், திருமணம் ஆனவர்கள் இந்த கனவை கண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆசிரியர் கனவில் வந்தால் என்ன பலன் :-

உங்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாக பெருகும். பணவரவு அதிகரிக்கும்.

கோயில் திருவிழா கனவு :-

கோயில் உற்சவம், தேரோட்டம் போன்ற திருவிழாக்கள் கனவில் கண்டால் விரைவில் உறவினர் மரணச் செய்தியை கேள்வியுற நேரிடலாம்.

அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன் :-

இந்த கனவை ஒரு திருமணம் ஆகாத ஆண் கானும் பட்சத்தில், அதற்கு நேர்மாறாக அவருக்கு மிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.

ஆகாயத்தில் பரப்பது போல் கனவு கண்டால் :-

இந்த மதிரி கனவு வந்தால் நீங்கள் செய்யும் வேலை சந்தோஷமாக, சுதந்திரமாக செய்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு பரப்பது போல் கனவு வந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக உங்களை சுற்றி பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பாத அர்த்தம்.

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் :-

அரிசி கனவில் வந்தாலோ அல்லது சந்தையில் வாங்குவது போல் கனவு வந்தால் அவர் செய்யும் தொழிலில் மிகுந்த தனலாபம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *