இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இனிப்பால் ஆன உணவு வகைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கடலை மிட்டாய் அனைவருக்குமே பிடித்த ஒன்று. கடலை மிட்டாய் வீட்டிலே எவ்வாறு எளிமையாக தயாரித்து விற்பனை செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தொழில்:
கடலை மிட்டாய் தொழில்
முதலீடு :
ஆரம்பத்தில் 500 ரூ முதலீடு செய்தாலே போதும்.
இடவசதி :
கடலை மிட்டாய் தயார் செய்ய அதிகமான இடவசதி தேவையில்லை. வீட்டில் சிறிது இடம் இருந்தாலே போதும்.
மூலப்பொருட்கள் :
நிலக்கடலை, வெல்லம் இந்த இரண்டு மூலப்பொருட்கள் வைத்து சுவையான நிலக்கடலை தயார் செய்யலாம்.
தயாரிப்பு :
கடலை மிட்டாய் தயார் செய்ய முதலில் நிலக்கடலையை சுத்தம் செய்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்த நிலக்கடலையை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் வெல்லத்தை பாகு காய்ச்சி, அதில் நிலக்கடலை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு அரிசி மாவு தடவிய மரப்பலகையில் கொட்டி விரித்து விடவும். பின் தேவையான அளவில் வெட்டி பேக் செய்து விற்பனை செய்யலாம்.
லாபம் :
500 ரூ முதலீடு செய்தால் 1500 ரூ லாபம் எடுக்கலாம்.
விற்பனை :
தயார் செய்த கடலை மிட்டாய் சிறிய சிறிய பெட்டிக்கடையில், மளிகை கடையில், பேக்கரியில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்கலாம்.