அதிகாலையில் இப்படி செய்தால் 10 நாட்களில் நினைத்ததை நடத்தும் கல் உப்பு!!!

நமது வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் அப்படி நடப்பதில்லை. நாம் நினைப்பது நடக்க வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பு, இறை வழிபாடு, இறைவனின் ஆசிர்வாதம் கண்டிப்பாக தேவை. நாம் நினைப்பதை அடைய கண்டிப்பாக அதற்கு கடின உழைப்பு தேவை அப்பொழுதுதான் அதை அடைய முடியும். வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் நாம் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றியடைய வேண்டும். குறுக்கு வழியில் வெற்றியடைய கூடாது.

நாம் நினைத்ததை நினைத்த உடனே நடத்தி முடிக்ககூடிய அற்புதமான பரிகாரம் தான் இந்த கல் உப்பு பரிகாரம் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.

உப்புக்கு ஒரு தனி மகத்துவமே உள்ளது. வீட்டில் விசேஷம் நடக்கும் போது நாம் சென்றால், அந்த வீட்டில் நடக்கும் ஆடம்பரமான ஏற்பாடுகளை பார்த்து வியப்பாக இருக்கும் போது, அந்த நல்ல நேரத்தில் எத்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கல் உப்பு வைப்பார்கள். எல்லாருடைய பார்வையும் கல் உப்பின் மீது படும் போது திருஷ்டி விலகுகிறது. அதனால் தான் விருத்தின் போதும் முதலில் உப்பு வைக்கிறார்கள். உப்பு விருந்தில் வைப்பது சுவைக்காக மட்டும் இல்லாமல் திருஷ்டி விலகவும் தான். நம் வீட்டு விசேஷத்திற்கு வருபவருடைப கெட்ட எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றக்கூடிய அற்புதமான சக்தி நாம் இலையில் வைக்கும் ஒரு சிட்டிகை உப்புக்கு உள்ளது.

முதலில் நாம் தினமும் காலையில் 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் எழுந்து இந்த உப்பு பரிகாரம் செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்தமான குளிக்க வேண்டும். முதியவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் குளிப்பதை தவிர்த்து முகம் கழுவி, பல் துலக்கினால் போதும். சுத்தம் ஆனதுக்கு பிறகு இரண்டு கைகளிலும் கல் உப்பு கைப்பிடி அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நமது வீட்டில் வடக்கு திசை பார்த்தவாறு தியான முறையில் அமர வேண்டும். பிறகு நமக்கு என்ன வேண்டும், என்ன நடக்க வேண்டும் என்பதை கடவுளிடம் வேண்டிக்கனும். மனதார நமக்கு நடக்க வேண்டியதை வேண்டிக்கனும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இவ்வாறு செய்யும் போது நம் வேண்டுதலுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. தியானம் முடிந்த பிறகு கையில் இருக்கும் கல் உப்பு ஓடும் நீரில் கரைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் wash basin னிலும் கரைக்கலாம். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியங்கள் நடக்கிறது. ஒரு நல்ல முடிவு கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *